பக்கம் எண் :

மாரீசன் வதைப் படலம் 489

நொய்து ஆருயிர் உண்டானை - உனது தாயான தாடகையை இழிவான
முறையில் மிக எளிதில் அழித்தவனை; கொல - கொல்லுதற்கு; யான்
சமைந்து நின்றேன் -
நான் ஒருப்பட்டு நிற்கின்றேன்; ஐயா போய்ப்
புணர்ப்பது என்னே -
ஐயனே, போய்ச் செயத் தக்கது என்ன; என்பது -
என நீ கேட்பது; பொருந்திற்று ஒன்றோ - பொருத்தமான கேள்விதானா?;
அவளை - அச்சீதையை; மாயையால் வஞ்சித்து அன்றோ வவ்வுதல் -
மாயம் செய்து வஞ்சனையால் அன்றோ பற்றுதல் வேண்டும்; என்றான் -
என்று (இராவணன்) கூறினான்.

     'என்ன செய்வது என்பதும் ஒரு கேள்வியா? போரிடுவதில்லை என
முன்னமே சொல்லியிருப்பதால் மாய வஞ்சமே வழி' என இராவணன்
கூறினான்.                                                  35

3272.'புறத்து இனி உரைப்பது என்னே?
     புரவலன் தேவிதன்னைத்
திறத்துழி அன்றி, வஞ்சித்து
     எய்துதல் சிறுமைத்து ஆகும்;
அறத்து உளது ஒக்கும் அன்றே? அமர்த்தலை
     வென்று கொண்டு, உன்
மறத் துறை வளர்த்தி, மன்ன!' என்ன
     மாரீசன் சொன்னான்.

    மன்ன - வேந்தனே; புறத்து இனி உரைப்பது என்னே - இனி
மேல் வேறு கூறுதற்கு யாது உள்ளது!; புரவலன் தேவி தன்னை - உலகு
காக்கும் இராமனின் மனைவியை; திறத்துழி அன்றி - உன் திறன்
காரணமாக அன்றி; வஞ்சித்து எய்துதல் - வஞ்சனையால் அடைதல்
என்பது; சிறுமைத்து ஆகும் - உன் தகுதிக்குத் தாழ்வானது ஆகும்;
அமர்த்தலை வென்று கொண்டு - போரில் இராமனை வெற்றி கொண்டு;
உன் மறத்துறை வளர்த்தி - உன் வீரத் தகுதியை வளர்த்துக்
கொள்வாயாக; அறத்து உளது ஒக்கும் அன்றே - அவ்வாறு செய்வது
நீதியின் மரபுக்குப் பொருந்துவதும் ஆகும் அல்லவா?; என்ன மாரீசன்
சொன்னான் -
என்று மாரீசன் இராவணனிடம் கூறினான்.

     உன் தகுதிக்கும் பெருமைக்கும் வஞ்சனை தக்கதன்று; வீரத்தால்
வெல்லுவதே மேன்மை என்று மாரீசன் கூறினான்.                  36

3273. ஆனவன் உரைக்க, நக்க அரக்கர்கோன்,
     'அவரை வெல்லத்
தானையும் வேண்டுமோ? என் தடக் கை
     வாள் தக்கது அன்றோ?