உலகம் தனில் மானா - உலகத்தில் வேறு உவமை இல்லாத; மன்றல் பொரும்தேன்நாறு நலம் செறி தொங்கலினான் - தெய்வ மணம் வீசும், தேனின் சிறப்புமிக்க மாலைஉடையவன்; வான் நாடியர் மீனொடு கடுத்து உயர்வென்றி அவாம் கண் எனும் - தேவமகளிரின்மீன்களைப் பகைத்து மேலான வெற்றியை விரும்பும் கண்கள் எனும்; வாள் உடையான் - வாள்களைத் தன் படையாகக் கொண்டவன் (இந்திரன்) தேவமகளிர் கண்களுக்கு வாட்படை உவமை. அவர்கள் கண்களைக் கொண்ட, யாகம் செய்துஇந்திர பதவியை அடைபவரை வெல்பவன் இந்திரன். கடுத்து - ஒத்து எனலுமாம். தெய்வ மகளின் கண்எனும் வாள்களைத் தன் மேல் பதியப் பெற்றவன் எனலுமாம். மானா உலகம் என்பது பொன்னுலகத்தைக்குறிக்கும் என்பர் சிலர். 12 2599. | வெல்வான் நசையால், விசையால், விடு நாள், எல் வான் சுடர் மாலை இராவணன்மேல், நெல் வாலும் அறாத, நிறம் பிறழா, வல் வாய் மடியா, வயிரப் படையான்- |
எல்வான் சுடர் மாலை இராவணன் மேல் - ஒளி மிக்க சூரியனைப் போல் விளங்கும் மணி மாலைகள் அணிந்த இராவணன் மீது; வெல்வான் நசையால் விசையால் விடுநாள் - அவனை வெல்லும் ஆசையால் வலிவோடு எறிந்த பொழுது; நெல் வாலும் அறாத - நெல்லின் வால் நுனி போன்ற சிறு பகுதியும் அழிந்து போகாத; நிறம் பிறழா வல்வாய் மடியா - ஒளி மாறாத வலிய அதன் வாய்நுனி அழியாத; வயிரப்படையான் - வச்சிராயுதம் எனும் படைக்கலம் உடையவன் (இந்திரன்) நெல்வால் - நெல்லின் நுனியில் அமைந்த நுட்பமான கூரிய பகுதி. 'கதிர் வாலின்செந்நெல் உள (2688). இராவணனால் ஒரு சிறிதும் ஊறு படுத்த முடியாத வயிரப்படை. இது இருதலைச்சூலமாய் நடுவே பிடி அமைந்த படைக்கலன். இந்திரன் ததீசி முனியை வேண்டிய போது அவர் அளித்தஅவரது முதுகெலும்பால் ஆனது. ஆயின் காப்பிய எதிர்த் தலைவனாம் இராவணன் மேல் வெற்றி கொளஇந்திரன் எதிர்ந்த போது அவன் மீது சிறிதும் ஊறு விளைவிக்காமலும் தன்னொளி கெடாமலும்இருந்த படை என்ற குறிப்புப் பொருளும் கொள்ள இடமுண்டு. 13 சரபங்கன் இந்திரனை வரவேற்று வினவல் 2600. | நின்றான், எதிர்நின்ற நெடுந் தவனும் |
|