பக்கம் எண் :

மாரீசன் வதைப் படலம் 491

ஒன்று இல்லை - வேறு செய்தற்கு ஏதும் வழி இல்லை; என்று எண்ணா-
என்று சிந்தித்தவனாய்.........

     (அடுத்த பாடலில் கருத்து முடியும்) தொடக்கத்தில் இராமனுடன் போர்
செய் என்று மாரீசன் தூண்டியது ஒருவகைச் சூழ்ச்சியே. போர் வருமாயின்
இராவணன் மடிவான். நாம் பிழைத்துக் கொள்ளலாம் என்பது அவன்
திட்டம். அது பலிக்கவில்லையென்பதால் இராவணன் ஏவலைச் செய்ய
முடிவு செய்கிறான்.                                            38

3275.'என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது?
     இயம்புக' என்றான்,
'பொன்னின் மான் ஆகிப் புக்கு,
     பொன்னை மால் புணர்த்துக' என்ன,
'அன்னது செய்வென்' என்னா,
     மாரீசன் அமைந்து போனான்;
மின்னு வேல் அரக்கர்கோனும் வேறு
     ஒரு நெறியில் போனான்.

    'என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது? - நான் எவ்வகையான
பெரிய மாயம் இங்கே செய்ய வேண்டும்?; இயம்புக என்றான் - கூறுக
என மாரீசன் கேட்டான் (அதற்கு இராவணன்); பொன்னின் மானாகிப்
புக்கு -
ஒரு பொன் மானாகக் (காட்டில்) நுழைந்து; பொன்னை - பொன்
போன்ற சீதைக்கு; மால் புணர்த்துக - மயக்கத்தை ஏற்படுத்துக; என்ன -
என்று திட்டம் தந்தான்; 'அன்னது செய்வென் என்னா - அவ்வாறே
செய்கின்றேன் என்று; மாரீசன் அமைந்து போனான் - மாரீசன் ஏற்றுக்
கொண்டு புறப்பட்டான்; மின்னு வேல் அரக்கர் கோனும் - ஒளிவீசும்
வேல் ஏந்திய அரக்கர் தலைவனும்; வேறொரு நெறியில் போனான் -
மற்றொரு திசையில் புறப்பட்டுச் சென்றான்.

     மாரீசனுக்கு மாயா மார்க்கம் உணர்த்தப்படவே, மாயமான் ஆதற்கு
அவன் செல்லலானான்.                                        39

மாரீசன் மனநிலையும் செயலும்

கலிவிருத்தம்

3276.மேல்நாள் அவர் வில்
     வலி கண்டமையால்,
தான் ஆக
     நினைந்து சமைந்திலனால்;
'மான் ஆகுதி'
     என்றவன் வாள் வலியால்