| | போனான் மனமும், செயலும் புகல்வாம். |
மேல் நாள் - முன் காலத்தில்; அவர் வில்வலி கண்டமையால் - இராமலக்குவர் வில்லாற்றலைக் கண்டறிந்திருப்பதால்; தானாக நினைந்து - (மாயமான் ஆதற்குத்) தானாகவே எண்ணி; சமைந்திலன் - மாரீசன் முடிவு செய்தான் இல்லை; மான்ஆகுதி - மாய மான் வடிவினை எடு; என்றவன் வாள் வலியால் போனான் - என ஆணையிட்ட இராவணன் வாளின் வலிமையை அறிந்திருந்ததால் அவன் ஆணையை ஏற்றுக் கொண்டவனாகிய மாரீசனது; மனமும் செயலும் புகல்வாம் - எண்ணத்தையும் செய்த செயல்களையும் இனிக் கூறுவோம். கவிக்கூற்று. போனான் - வினையாலணையும் பெயர். ஆல்- அசை. 40 | 3277. | வெஞ் சுற்றம் நினைந்து உகும்; வீரரை வேறு அஞ்சுற்று மறுக்குறும்; ஆழ் குழி நீர் நஞ்சு உற்றுழி, மீனின் நடுக்குறுவான் நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால். |
வெஞ் சுற்றம் - தன் விருப்பத்துக்கு உரிய உறவினரை; நினைந்து உகும் - (மாரீசன் மனம்) எண்ணி வருந்துவான்; வீரரை வேறு அஞ்சுற்று மறுக்குறும் - இராமலக்குவராகிய வீரர்களை ஒருபுறம் நினைந்து அச்சமுற்று மயங்குவான்; ஆழ் குழி நீர் - ஆழ்ந்த பள்ளத்து நீரானது; நஞ்சு உற்றுழி - முற்றும் நச்சுமயமானால்; மீனின் நடுக்குறுவான் - மீன்கள் என்ன பாடு படுமோ அவ்வாறு நடுக்கமும் கொண்டான்; நெஞ்சு உற்றது ஓர் பெற்றி - அவன் நெஞ்சம் அடைந்த உணர்ச்சித் தன்மை; நினைப்பு அரிது - இவ்வாறிருந்தது என எண்ணிட முடியாததாய் இருந்தது; ஆல் - ஈற்றசை. அழிவு உறுதி என்பதால் பிரிகின்ற சுற்றத்தை நினைத்து வருந்தினான். நச்சு நீரில் தப்பிக்க முடியாத மீன்போல் துடித்தான் மாரீசன்.41 | 3278. | அக் காலமும், வேள்வியின், அன்று தொடர்ந்து இக் காலும், நலிந்தும் ஓர் ஈறு பெறான்; |
|