பக்கம் எண் :

மாரீசன் வதைப் படலம் 493

முக் காலின்
     முடிந்திடுவான் முயல்வான்
புக்கான், அவ் இராகவன்
     வைகு புனம்.

    வேள்வியின் அன்று - (விசுவாமித்திரர் செய்த) யாகம் நிகழ்ந்த
போதும்; அக்காலமும் - தண்ட காரண்யத்தில் மானாகச் சென்ற
அப்போதும்; நலிந்தும் - துன்புற நேர்ந்தும்; தொடர்ந்து இக்காலும் -
இன்று வரை தொடர்ச்சியாக; ஓர் ஈறு பெறான் - ஒரு முடிவையோ
மரணத்தையோ பெறாத (மாரீசன்); முக்காலின் - இப்போது மூன்றாம்
முறையாக; முடிந்திடுவான் முயல்வான் - மரணமுற இசைந்து அதன்
வழியே செல்கின்றவனாய்; அவ் இராகவன் வைகு புனம் - அந்த
இராமபிரான் தங்கியுள்ள வனம் நோக்கி; புக்கான் - சென்றடைந்தான்.

     மூன்றாம் முறை மரணம் உறுதியென அறிந்து அதனைச் சந்திக்க
சென்றான் மாரீசன்.                                           42

மாயப் பொன் மானாய் மாரீசன் தோன்றுதல்

3279. தன் மானம் இலாத,
     தயங்கு ஒளி சால்
மின் வானமும் மண்ணும்
     விளங்குவது ஓர்
பொன் மான் உருவம்
     கொடு போயினனால்-
நன் மான்
     அனையாள்தனை நாடுறுவான்.

    தன் மானம் இலாத - தனக்கு நிகர் இல்லாத; தயங்கு ஒளி சால் -
அசைகின்ற ஒளி பொருந்திய; மின் - உடல் மின்னுதலால்; வானமும்
மண்ணும் விளங்குவது ஓர் -
விண்ணும் மண்ணும் விளக்கமுறும் படியான
ஒரு; பொன் மான் உருவம் - தங்க மானின் வடிவம்; கொடு போயினன்-
எடுத்துக் கொண்டு மாரீசன் சென்றான்; நன்மான் அனையாள் தனை -
உயர்ந்த மான் போன்ற சீதையினை; நாடுறுவான் - தேடிச் சென்று
அடைந்தான்; ஆல் - அசை.

     மாயமான் கண்டாரைக் கவரும் ஒளிமிக்கதாய் விளங்கியது. தனை
நாடுறுவான் என்பதற்குச் சீதை தன்னை நாடும்படியாகச் சென்றான் எனவும்
பொருள் கூறுவர்.                                            43

3280. கலைமான் முதல் ஆயின
     கண்ட எலாம்,