அம் மான் வேண்டுமென வாயால் கூறாது உணர்த்திக் காட்டினாள். 49 3286. | 'இம் மான் இந் நிலத்தினில் இல்லை' எனா, எம்மான் இதனைச் சிறிது எண்ணல் செயான், செம் மானவள் சொல்கொடு, தே மலரோன் அம்மானும், அருத் தியன் ஆயினனால். |
'இம் மான் - இது போன்றதொரு மான்; இந் நிலத்தினில் இல்லை - இந்த உலகத்தில் இதுவரை இருந்ததில்லை; எனா - என்று ஆராய்ந்து; எம்மான் - எம் தலைவனும்; தேமலரோன் அம்மானும் - பிரமனது தந்தையுமாகிய இராமபிரான்; இதனைச் சிறிது எண்ணல் செயான் - இவ்வாறு சற்றும் சிந்தியாதவனாய்; செம்மான் அவள் - செம்மை நிரம்பிய மான் போன்ற சீதையின்; சொல் கொடு - ஆசைச் சொற்களை ஏற்று; அருத்தியன் ஆயினன் - தானும் (மானின்மேல்) விருப்பம் கொண்டான்; ஆல் - ஈற்றசை. எல்லாவற்றையும் படைக்கும் பிரமனின் தந்தையான இராமனுக்கு, இம் மாயமான் போன்றதொரு படைப்பு இயற்கையில்லை என்ற ஆராய்ச்சி ஏற்படவில்லை. 50 இலக்குவன் 'அது மாயமான்' எனல் 3287. | ஆண்டு, அங்கு, இளையான் உரையாடினனால், 'வேண்டும் எனலாம் விழைவு அன்று இது' எனா; 'பூண் துஞ்சு பொலங் கொடியோய்! அது நாம காண்டும்' எனும் வள்ளல் கருத்து உணர்வான். |
வேண்டும் எனலாம் - சீதை விரும்பிக் கேட்கின்ற தன்மையினால்; விழைவு அன்று இது - பொருத்தமான ஆசை அன்று இது; எனா! - என்று கூறாது; 'பூண் துஞ்சு பொலங் கொடியோய் - அணிகலன்கள் அழகுடன் பொருந்தும் பொற்கொடி போன்றவளே!; அது நாம் காண்டும் - அந்த மானைக் காணலாம்; எனும் வள்ளல் கருத்து உணர்வான் - என்று கூறும் இராமனுடைய சிந்தனைப் போக்கை உணர்ந்தவனாய்; இளையான் - தம்பியாகிய இலக்குவன்; ஆண்டு அங்கு உரையாடினன் - அப்போது |