| சென்றான், எதிர்கொண்டு; சிறப்பு அமையா, 'என்தான் இவண் எய்தியவாறு?' எனலும், பொன்றாத பொலங் கழ லோன் புகலும்; |
நின்றான் - (இந்திரன் அச் சரபங்கர் ஆசிரமத்தில்) சென்று நின்றான்; எதிர் நின்ற நெடுந்தவனும்எதிர் கொண்டு சென்றான் - அங்கு அவன் எதிரில் நின்ற பெருந்தவம் செய்தவனாகியசரபங்கனும் எதிர் வந்து அழைத்துச் சென்றான்; சிறப்பு அமையா - வந்த அதிதிக்குரியஉபசாரங்கள் செய்து; 'இவண் எய்தியவாறு என்' எனலும் - இங்கு நீ வந்த காரணம் யாது' எனக் கேட்டலும்; பொன்றாத பொலங் கழலோன் புகலும்- கெடாத பொற்கழல் அணிந்தஇந்திரன் பின்வருமாறு கூறினான்; தான் - அசை. நின்ற நெடுந்தவன் என்பதற்கு நிலைபெற்று நெடிய தவம் செய்த சரபங்க முனிவன் எனலுமாம்.இந்திரன் பெற்ற பல வெற்றிகளைக் குறிக்கும் பொலங்கழல் அணிந்த நிலை. 14 இந்திரன் பிரம லோகத்திற்கு அழைத்தலும் முனி மறுத்தலும் 2601. | "நின்னால் இயல் நீதி நெடுந் தவம், இன்று, என்னானும் விளம்ப அரிது" என்று உணர்வான் அந் நான்முகன், நின்னை அழைத்தனனால்; பொன் ஆர் சடை மாதவ! போதுதியால்; |
பொன் ஆர் சடை மாதவ - பொன்னிறம் பொருந்திய சடையுடைய பெரும் தவத்தோனே; நின்னால் இயல் நீதி நெடுந்தவம் -உம்மால் செய்யப்பெற்ற முறை தவறாத பெருந்தவம்; என்னானும் விளம்ப அரிது என்றுஉணர்வான் - எவ்வகையாலும் எடுத்துக் கூறுவதற்கு அரியது என்று உணர்ந்தவனாகி; அந்நான்முகன் நின்னை அழைத்தனனால் - அந்த நான்கு முகமுடைய பிரமதேவன் உம்மைத் தம்உலகிற்கு வர அழைத்தனன் ஆதலின்; இன்று போதுதி - இப்பொழுது அங்குப்போகஎழுந்தருள்வீராக; ஆல் - அசை. என்னால் கூடக் கூற இயலாது என்ற கூற்றை இந்திரன் கூற்றாகவும் கொள்ளலாம். இந்திரன்ஐந்திரம் எனும் இலக்கணம் இயற்றிய அறிஞன். அத் |