பக்கம் எண் :

மாரீசன் வதைப் படலம் 501

சேக்கையின் அரவு நீங்கிப்
     பிறந்தது தேவர் செய்த
பாக்கியம் உடைமை அன்றோ?
     அன்னது பழுது போமோ?

     நோக்கிய மானை நோக்கி - எதிரில் விழித்து நின்ற மானைஉற்றுப்
பார்த்து; நுதியுடை மதியின் ஒன்றும் தூக்கிலன் - இராமன்கூரிய
அறிவின் துணை கொண்டு எதனையும் சீர்தூக்கிப்பார்க்கவில்லை; நன்று
இது என்றான் -
இந்த மான் மிக அழகியதுஎன்று தானும் கூறினான்;
அதன் பொருள் சொல்லல் ஆகும்? -அச் சொல்லின் பொருள்
நுட்பத்தை ஆராய்ந்து கூற முடியுமோ? முடியாது); சேக்கையின் அரவு
நீங்கிப் பிறந்தது -
அனந்தசயனத்திலிருந்து மண்ணுலகில் வந்து
அவதாரம் செய்தமை; தேவர்செய்த பாக்கியம் உடைமை அன்றோ -
தேவர்கள் ஆற்றியபுண்ணியம் என்று கூறலாம் அல்லவா?; அன்னது பழுது
போமோ?-
அப் புண்ணியம் வீணாகிப் போகுமோ? (போகாது என்றபடி).

     தேவர் செய்த பாக்கியத்தால் இராமாவதாரம் நிகழ்ந்தமையின்,மாய
மானை இராமனும் தொடர ஆசைப்பட்டதன் கருத்து மறைமுகமாகப்
புலனாகின்றது என்று சுட்டிக் காட்டினார்.                        57

3294.'என் ஒக்கும் என்னல்
     ஆகும்? இளையவ! இதனை நோக்காய்;
தன் ஒக்கும் உவமை அல்லால், தனை
     ஒக்கும் உவமை உண்டோ?
பல், நக்க தரளம் ஒக்கும்; பசும்
     புல்மேல் படரும் மெல் நா
மின் ஒக்கும்; செம் பொன், மேனி;
     வெள்ளியின் விளங்கும் புள்ளி.

    'இளையவ! - தம்பியே!; இதனை நோக்காய் - இம்மானை
நன்கு பாராய்; என் ஒக்கும் என்னல் ஆகும் - எதனை இதனோடு
ஒப்பிட்டுக் கூற முடியும்?; தன் ஒக்கும் உவமை அல்லால் -
தனக்குத் தானே ஒப்பாக உவமை கூறத்தக்கதே அல்லாமல்; தனை
ஒக்கும் உவமை உண்டோ? -
இதனைப் போன்ற ஒன்று என்று கூற
வேறு பொருள் உலகில் ஏது?; பல் - இம் மானின் பற்கள்; நக்க
தரளம் ஒக்கும் -
சிரிக்கின்ற முத்துக்கள் போன்றுள்ளன; பசும்புல்
மேல் படரும் மெல் நா -
பச்சைப் புற்களின் மீது செல்லும் இதன்
மெல்லிய நாக்கு; மின் ஒக்கும் - மின்னலைப் போன்றுள்ளது; மேனி
செம் பொன் -
உடலோ சிவந்த பொன்னைப் போன்றுள்ளது; புள்ளி
வெள்ளியின் விளங்கும் -
உடல் மேற் புள்ளிகளோ வெள்ளி
போன்றுள்ளது (என்றான் இராமன்)