பக்கம் எண் :

மாரீசன் வதைப் படலம் 505

     மாயமான், மெய்யான மான் என்ற இரண்டு நிலையிலும்மானைப்
பிடிப்பதால் தீமை இல்லை என உரைத்தான் இராமன். மாயமான் சாக்கிட்டு
அவதார நோக்கம் நிறைவெய்தப் போவதால்,'தேவரை இடுக்கண் தீர்ப்பான்'
என்று இராமனைக் குறித்தார்.             63

3300.'பின் நின்றார் இனையர் என்றும்
     உணர்கிலம்; பிடித்த மாயம்
என் என்றும் தெளிதல்
     தேற்றாம்; யாவது ஈது என்றும் ஓராம்;
முன் நின்ற முறையின்
     நின்றார் முனிந்துள வேட்டம் முற்றல்,
பொன் நின்ற வயிரத் தோளாய்! புகழ்
     உடைத்தாம் அன்று' என்றான்.

    'பொன் நின்ற வயிரத் தோளாய் - பொன் போல் அழகிய
வைரம் பாய்ந்த தோள்களை உடையவனே; பின் நின்றார் இனையர்
என்றும் உணர்கிலம் -
இம் மாயமானை ஏவிப் பின்னே நிற்பவர்
யாவர் என்றும் தெரியவில்லை; பிடித்த மாயம் - அவர்கள் கைக்
கொண்டுள்ள மாயை; என் என்றும் தெளிதல் தேற்றாம் -
எத்தகையது என்றும் உணர இயலவில்லை; யாவது ஈது என்றும்
ஓராம் -
இம் மான் தான் எத்தகையது என்றும் எண்ணிப் பார்க்க
முடியவில்லை (அதனால்); முன் நின்ற முறையின் நின்றார் - நமக்கு
முன்னே நீதி நெறியில் நின்ற பெரியோர்கள்; முனிந்து உள -
வெறுத்து ஒதுக்கிய; வேட்டம் முற்றல் - வேட்டைத் தொழிலில்
ஈடுபடுதல்; புகழ் உடைத்தாம் அன்று - புகழ் தரும் செயல் அன்று';
என்றான் - என்று (இலக்குவன்) கூறினான்.

     வேறு காரணங்களுக்கு இசையாத இராமனிடம் முன்னோர்வெறுத்த
வேட்டைத் தொழில் வேண்டாம் என்று புதிய உத்தியைஇலக்குவன்
கையாளுகின்றான். சாது விலங்குகளை வேட்டையாடுதல்பெரியோர்களால்
விலக்கப்பட்டது; ஆதலின் இலக்குவன் இம்மானுக்குஇடர் செய்ய வேண்டா
என்று பேசிப் பார்க்கிறான்.64

3301.'பகையுடை அரக்கர் என்றும், பலர்
     என்றும், பயிலும் மாயம்
மிகையுடைத்து என்றும், பூண்ட
     விரதத்தை விடுதும் என்றல்
நகையுடைத்து ஆகும் அன்றே? ஆதலின்
     நன்று இது' என்னா,
தகையுடைத் தம்பிக்கு, அந் நாள்,
     சதுமுகன் தாதை சொன்னான்.