பக்கம் எண் :

506ஆரணிய காண்டம்

     'பகையுடை அரக்கர் என்றும் - நமக்குப் பகைவரான அரக்கர்
பெயரைக் கூறியும்; பலர் என்றும் - அவர்கள் எண்ணிக்கையால்
பலர் என்று பயமுறுத்தியும்; பயிலும் மாயம் மிகையுடைத்து என்றும்-
அவர்களின் மாயத் தந்திரங்கள் மிகுதியானவை என்று கூறியும்;
பூண்ட விரதத்தை - அவர்களை அழிக்க நாம் கொண்ட விரதத்தை;
விடுதும் என்றல் - விட்டு விடக் கருதுதல்; நகை உடைத்து ஆகும்
அன்றே -
பிறர் கேட்டுச் சிரிக்கத் தக்கதாகி விடும், அல்லவா?;
ஆதலின் இது நன்று - ஆகையால், இம்மானைப் பிடிக்கும் செயலில்
பிழையில்லை; என்னா - என்று; அந்நாள் - அப்போது; சதுமுகன்
தாதை -
பிரமனின் தந்தையாகிய இராமன்; தகையுடைத் தம்பிக்கு -
பெருமைமிக்க தம்பி இலக்குவனுக்கு; சொன்னான் -எடுத்துரைத்தான்.

     இராமனும் தன் கொள்கையில் பின் வாங்காது இலக்குவனிடம்,
நம் விரதத்தினின்றும் மாறி நிற்றல் ஆகாது என்றான்.                65

3302.'அடுத்தவும் எண்ணிச் செய்தல்,
     அண்ணலே! அமைதி அன்றோ?
விடுத்து, இதன் பின் நின்றார்கள் பலர்
     உளர் எனினும், வில்லால்
தொடுத்த வெம் பகழி தூவித் தொடர்ந்தனென்,
     விரைந்து சென்று,
படுக்குவென்; அது அன்று ஆயின், பற்றினென்
     கொணர்வென்' என்றான்.

    'அண்ணலே! - தலைமை மிக்கவனே; அடுத்தவும் -செய்யத்தக்க
எச் செயலையும்; எண்ணிச் செய்தல் - ஆராய்ந்துசெய்தல்; அமைதி
அன்றோ -
பொருத்தம் உடையது அல்லவா?(அது நிற்க); விடுத்து
இதன்பின் நின்றார்கள் -
இம்மானை அனுப்பிஇதன் பின் ஒளிந்து
நிற்போர்; பலர் உளர் எனினும் - பலராகஇருந்த போதிலும்; வில்லால்
தொடுத்த வெம் பகழி தூவி -
வில்லில் தொடுத்த கொடிய அம்புகளை
ஏவி; தொடர்ந்தனென் -பின் தொடர்வேன்; விரைந்து சென்று - மேலும்
வேகமாய்ப் போய்;படுக்குவென் - அவர்களை அழிப்பேன்; அது அன்று
ஆயின் -
இல்லையெனில்; பற்றினென் கொணர்வென் - மானைக்
கைப்பற்றிஇழுத்து வருவேன்; என்றான் - என்று இலக்குவன் தெரிவித்தான்.

     'மானின் பின் தாங்கள் செல்வதற்குப் பதில் நானே சென்றுவென்று வருவேன்' என இலக்குவன் வேண்டுகின்றான்.                       66

3303. ஆயிடை, அன்னம் அன்னாள்,
     அமுது உகுத்தனைய செய்ய