பக்கம் எண் :

508ஆரணிய காண்டம்

     சீதையின் ஊடலைத் தவிர்க்கும் பொருட்டு இராமன் தானே
புறப்பட்டான். மேகம் கண்டு களிக்கும் மயில் போல, நீல மேக
வடிவினனான இராமனைக் கண்டு களிக்கும் மயில் சீதை என்பதாம்.
கோப்பெருந்தேவி ஊடல் பாண்டியனுக்கும் கண்ணகிக்கும் அவலம்
விளைத்தது; சீதையின் ஊடல் சீதைக்கும் இராமனுக்கும் அவலம்
விளைத்தது.                                                68

3305.'முன்னமும் மக வாய் வந்த மூவரில்
     ஒருவன் போனான்;
அன்ன மாரீசன் என்றே
     அயிர்த்தனன், இதனை; ஐய!
இன்னமும் காண்டி; வாழி, ஏகு'
     என, இரு கை கூப்பி,
பொன் அனாள் புக்க சாலை
     காத்தனன், புறத்து நின்றே.

    'முன்னமும் மக வாய் வந்த - விசுவாமித்திர முனிவனது
யாகத்தில் முன்னர் வந்த; மூவரில் ஒருவன் போனான் - மூன்று
அரக்கருள் ஒருவன் ஆகிய மாரீசன் தப்பிப் போனான்; இதனை
அன்ன மாரீசன் என்றே -
அந்த மாரீசனாக (இம்மான்) இருத்தல்
கூடுமோ என்று; அயிர்த்தனன் - ஐயம் கொண்டேன்; (அதனால்);
ஐய - என் ஐயா; இன்னமும் காண்டி - மேலும் சிந்தித்துப் பாராய்;
ஏகு - செல்வாயாக; வாழி - (தீங்கு நேராது) வாழ்க; என இரு கை
கூப்பி -
என்று இரண்டு கரங்களையும் எடுத்து வணங்கி;
பொன்னனாள் புக்க சாலை - திருமகளான சீதை புகுந்த பர்ண
சாலையை; புறத்து நின்றே காத்தனன் - வாசலில் நின்றவாறு காவல்
காக்கத் தொடங்கினான்.

     கூரிய அறிவு மிக்க இலக்குவன் தன் சகோதரனுக்குக் கடைசிக்
கணத்திலும் அறிவுரை கூறித் தெருட்டும் நுட்பம் வியப்புக்கு உரியது.
மகம் - யாகம்; மக வாய் வேள்வியின் போது.                      69

3306. மந்திரத்து இளையோன் சொன்ன வாய்மொழி
     மனத்துக் கொள்ளான்;
சந்திரற்கு உவமை சான்ற வதனத்தாள்
     சலத்தை நோக்கி,
சிந்துரப் பவளச் செவ் வாய் முறுவலன்,
     சிகரச் செவ்விச்
சுந்தரத் தோளினான், அம்
     மானினைத் தொடரலுற்றான்.