பக்கம் எண் :

மாரீசன் வதைப் படலம் 509

     மந்திரத்து இளையோன் - எண்ணிச் சிந்திக்க வல்ல தம்பி
இலக்குவன்; சொன்ன வாய்மொழி - எடுத்துக் கூறிய வாய்மை மிக்க
மொழியை; சிகரச் செவ்விச் சுந்தரத் தோளினான் - மலையென
உயர்ந்த அழகிய தோள்களை உடைய இராமன்; மனத்துக்
கொள்ளான் -
தன் மனத்தில் ஏற்றுக் கொள்ளாதவனாய்; சந்திரற்கு
உவமை சான்ற -
பூரணச் சந்திரனுக்கு உவமை கூறத்தக்க;
வதனத்தாள் சலத்தை நோக்கி - முகத்தை உடைய சீதையின்
கோபத்தையே எண்ணியவனாய்; சிந்துரப் பவளச் செவ்வாய்
முறுவலன் -
சிந்தூரமும் பவளமும் போன்ற சிவந்த இதழ்களில்
புன்முறுவல் பூண்டவனாய்; அம்மானினைத் தொடரல் உற்றான் -
அந்த மானைத் தொடர்ந்து செல்லத் தொடங்கினான்.

     வாய்மொழி - வாய்மை ஆகிய மொழி. பண்புத் தொகை.
வாயின் மொழி எனப் பொருள் கொண்டால் வேற்றுமைத் தொகை.

     இலக்குவனின் எச்சரிக்கையும், சீதையின் கோபமும்இராமனுக்குச்
சிரிப்பைத் தந்தன, அவன் வீரனாகையால்.                         70

3307.மிதித்தது மெல்ல மெல்ல;
     வெறித்தது வெருவி; மீதில்
குதித்தது; செவியை நீட்டி, குரபதம்
     உரத்தைக் கூட்டி,
உதித்து எழும் ஊதை, உள்ளம், என்று
     இவை உருவச் செல்லும்
கதிக்கு ஒரு கல்வி வேறே
     காட்டுவது ஒத்தது அன்றே.

    (அந்த மாய மான்); மெல்ல மெல்ல மிதித்தது - மெதுவாய்
மெதுவாய் நிலத்தில் ஊன்றி நடந்தது; வெருவி வெறித்தது -
(பின்னர்) அஞ்சினாற் போல் வெறித்து நோக்கியது; செவியை நீட்டி -
காதுகளை விறைத்து நீட்டியவாறு; குரபதம் உரத்தைக் கூட்டி - தன்
கால் குளம்புகளை மார்புடன் ஒடுக்கி; மீதில் குதித்தது - வானேறித்
தாவியது; உதித்து எழும் ஊதை - பொங்கி வரும் காற்று; உள்ளம்
என்று இவை -
மனம் என்னும் இவற்றை; உருவச் செல்லும் கதிக்கு
-
(வாயு வேகம், மனோ வேகம் என்கின்ற வேகங்களை) தாண்டிச்
செல்லும் விரைவு நடைக்கு; ஒரு கல்வி - ஒரு புதிய பெயரைக்
கற்பிக்கும்படி; வேறே காட்டுவது ஒத்தது - புதிதான நடையைக்
காட்டுவதாய் அமைந்தது; அன்றே - ஈற்றசை.

     வாயு வேக, மனோ வேகங்களைக் கடந்த வேகத்தில் இம்மான்
சென்றதால் புதிய பெயர் ஒன்று சூட்டும்படியாக அவ்வேகம்
அமைந்தது என்றார்.                                              71

3308. நீட்டினான், உலகம் மூன்றும்
     நின்று எடுத்து அளந்த பாதம்;