பக்கம் எண் :

512ஆரணிய காண்டம்

  உற்ற வேகத்தின்
     உம்பரின் ஓங்கினான்.

    'இனிப் பற்றுவான் அல்லன் - இனி (இராமன் என்னைப்)
பிடிக்க முயலமாட்டான்; பகழியால் செற்று - அம்பால் கொன்று;
வானில் செலுத்தல் உற்றான் - விண்ணில் செலுத்தக் கருதினான்';
என - என்று; மனக் கொளா - சிந்தையில் உணர்ந்தவனாய்; அம்
மாய அரக்கன் -
மாயை வல்ல அம்மாரீசன்; உற்ற வேகத்தின் -
மிக்க விரைவுடன்; உம்பரின் ஓங்கினான் - வானத்தில் உயரே
பாய்ந்தான். மற்ற - அசை.

     பிடிக்க எண்ணும் மனநிலை இராமனிடம் மாறிவிட்டதை மாரீசன்
அறிந்தான். இனி அம்பால் கொல்வான் என்று கணித்தான்.          75

3312. அக் கணத்தினில், ஐயனும்,
     வெய்ய தன்
சக்கரத்தின் தகைவு
     அரிது ஆயது ஒர்,
செக்கர் மேனிப்
     பகழி செலுத்தினான்-
'புக்க தேயம் புக்கு இன்
     உயிர் போக்கு' எனா.

    அக் கணத்தினில் - அந்த நொடிப் பொழுதில்; ஐயனும் -
இராமனும்; புக்க தேயம் புக்கு - எங்கே அந்த மான் செல்லுகிறதோ
அங்கெல்லாம் சென்று; இன் உயிர் போக்கு எனா - அதன் இனிய
உயிரை நீக்கு என்று ஆணையிட்டு; வெய்ய தன் சக்கரத்தின் -
கொடிய தன் சக்கராயுதம் போன்று; தகைவு அரிது ஆயது ஒர் -
தடுப்பதற்கு இயலாத ஒரு; செக்கர் மேனிப் பகழி - சிவந்த
அம்பினை; செலுத்தினான் - ஏவினான்.

     தப்ப முயலும் மாரீசனைத் தாக்கி அழிக்கும் இராமபாணம் ஏவப்
பெற்றது.                                                  76

3313.நெட்டிலைச் சரம் வஞ்சனை நெஞ்சுறப்
பட்டது; அப்பொழுதே, பகு வாயினால்,
அட்ட திக்கினும், அப்புறமும் புக
விட்டு அழைத்து, ஒரு குன்று என வீழ்ந்தனன்.

    நெட்டிலைச் சரம் - நெடிய இலை வடிவம்  கொண்ட
அவ்வம்பு; வஞ்சனை நெஞ்சுறப் பட்டது - வஞ்சகம் நிரம்பிய
(மாரீசன்) நெஞ்சில் சென்று தாக்கியது; அப்பொழுதே - அந்தக்
கணமே; பகு வாயினால் - பிளவுபட்ட வாயினால்; அட்டதிக்கினும்
-
எட்டுத் திசைகளிலும்; அப்புறமும்