பக்கம் எண் :

514ஆரணிய காண்டம்

அக் கீழ்மகன் உடலை; நின்று உற நோக்கினான் - அருகில் நின்று
உற்றுப் பார்த்தான் (இராமன்); மாசு இல் மாதவன் - குற்றம் இல்லாத
பெருந்தவமுடைய விசுவாமித்திரனது; வேள்வியின் வந்த - யாக
காலத்தில் வந்த; மாரீசனே இவன் - மாரீசனே இவன்; என்பதும்
தேறினான் -
என்பதனையும் உணர்ந்து கொண்டான்.

     ஆசை - திக்க என்று பொருள்படும் வடசொல் இலக்குவன்
உய்த்துணர்ந்த அரக்கன் மாயத்தை. இராமன் அனுபவித்தேஅறிந்தான். 79

3316.'புழைத்த வாளி உரம்
    புக, புல்லியோன்,
இழைத்த மாயையின், என்
     குரலால் இசைத்து
அழைத்தது உண்டு; அது கேட்டு
     அயர்வு எய்துமால்,
மழைக் கண் ஏழை' என்று,
     உள்ளம் வருந்தினான்.

    'புழைத்த வாளி - ஊடுருவிச் செல்லும் அம்பு; உரம் புக -
தன் மார்பில் பட்டதும்; புல்லியோன் - இழிந்தவனாகிய மாரீசன்;
இழைத்த மாயையின் - செய்த மாயத்தினால்; என் குரலால்
இசைத்து -
என் குரல் போன்ற குரலால் (சீதையையும்
இலக்குவனையும்) கூவி; அழைத்தது உண்டு - அழைத்துள்ளான்
அல்லவா?; அது கேட்டு் - அக்குரலைப் பிறழ உணர்ந்து;
மழைக்கண் ஏழை - மழை போல் குளிர்ந்த கண்களை உடைய
பேதை ஆகிய சீதை; அயர்வு எய்தும் - துன்பம் உறுவாள்'; என்று
உள்ளம் வருந்தினான் -
என்று மனம் நொந்தான் (இராமன்). ஆல்-
அசை.

     மழைக் கண் - மழை போல் கண்ணீர் விடுகிற கண் என்றுமாம்.  80

3317.'மாற்றம் இன்னது, "மாய
     மாரீசன்" என்று,
ஏற்ற காலையின் முன்
     உணர்ந்தான் எனது
ஆற்றல் தேரும்
     அறிவினன்; ஆதலால்,
தேற்றுமால் இளையோன்'
     எனத் தேறினான்.

    இளையோன் - தம்பி இலக்குவன்; ஏற்ற காலையின் - மானை
எதிர் கொண்ட அளவிலே; மாய மாரீசன் என்று முன் உணர்ந்தான்-
மாயை செய்தவன் மாரீசன் என்று முன்னமே அறிந்து சொன்னான்;
எனது ஆற்றல்