'நீ உணர் தொன்மையை' என இந்திரன் சரபங்கரிடம் கூறியதால் இந்திரனும் அறியாத மிகப்பழங்காலத் தவசி அவர் என்பது தெரிகிறது. வாலறிவான் என்ற தொடர் குறளில் (2) காணும்'வாலறிவன்' என்பதுடன் ஒப்பிடற்குரியது. நல்லாள் என்பது முனிவரின் மனைவி என்பதைப் பின் வருபாடலாலும் (2628) அறியலாம். 17 2604. | 'சொல் பொங்கு பெரும் புகழோய்! தொழில் மாய் சிற்பங்களின் வீவன சேர்கு வெனோ? அற்பம் கருதேன்; என் அருந் தவமோ கற்பம் பல சென்றது; காணுதியால்; |
சொல் பொங்கு பெரும் புகழோய் - சொற்களால் மேம்படும் உயர்ந்த கீர்த்தியுடையயோனே!; மாய்தொழில் சிற்பங்களின் வீவனசேர்கு வெனோ - அழியும் வினையையுடைய அற்பப் பொருள்கள் போல அழியக்கூடிய பதவிகளை யான்அடைவேனோ?; (மாட்டேன்); அற்பம் கருதேன் - கீழான இப்பதவியை அடைய விரும்பேன், என் அருந்தவமோ கற்பம் பல சென்றது காணுதி - யான் செய்த அரிய தவமோ பல கற்பகாலங்கள்சென்றவை ஆயின; இதனை நீ அறிவாயாக; ஆல் - அசை. சொல் பொங்கு பெரும் புகழோய் என இந்திரனை விளித்தலால் வியா கரண சாத்திரங்களைஅவன் நன்குணர்ந்தமை பெறப்படும். தொழில்மாய் சிற்பம் என்றதால் பிரமலோகமும் அழியும்அற்பப் பொருள் என அறியலாம். கற்பம் - பலயுகங்கள் கொண்ட காலம்; சென்ற பாடலில் (2603)தொன்மையை என்றமை இதன் பொருளை விளக்கி நிற்கும். 18 2605. | 'சொற்றும் தரம் அன்று இது; சூழ் கழலாய்! பெற்றும், பெறு கில்லது ஓர் பெற்றியதே; மற்று என் பல? நீ இவண் வந்ததனால், முற்றும் பகல் தானும் முடிந்து ளதால்; |
சூழ்கழலாய்- கட்டிய வீரக்கழல் அணிந்தவனே!; இது சொற்றும் தரம் அன்று - நீ சொல்லும் இதுபேசத்தக்கது அன்று; (ஏனெனில் அப்பேறு) பெற்றும் பெறுகில்லது ஓர் பெற்றியதே - அடைந்தாலும் அடைந்ததாகக் |