பக்கம் எண் :

சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் 53

கருதப்படாத ஒரு தன்மையதாகும்; மற்று என்பல - வேறு பல சொல்
கூறுவது எதற்கு?; நீஇவண் வந்ததனால் - நீ இங்கு வந்ததால்; பகல்
தானும் முற்றும் முடிந்துளது -
என்வாழ்வுக் காலம் முழுதும்
முடிந்ததாகும்; ஆல் - அசை.

     பிரமலோகப் பதவியைச் சரபங்கர் அற்பமாகக் கருதியதையும் இந்திரன்
வந்ததால் தம்வாழ்வுக் காலம் முடிவுறுவதையும் அவர் உணர்ந்த நிலை
புலப்படுகிறது. சிறந்த தவம் புரிந்தோர்தவமுடிவைத் தேவர் முதலோர் வந்து
தெரிவிப்பதை இக்காண்டப் பாடலில் (3705) வீட்டினுக்குஅமைவதான மெய்ந்
நெறி வெளியிற்றாகக் காட்டுறும் அறிஞர்' என்ற தொடர் கூறும். பகல்
என்பது நேரத்தின் பொதுப் பெயராய் இங்கு வாழ்நாளைக் குறிக்கிறது.    19

2606.'சிறு காலை இலா,
     நிலையோ திரியா,
குறுகா, நெடுகா, குணம்
     வேறுபடா,
உறு கால் கிளர் பூதம்
     எலாம் உகினும்
மறுகா, நெறி எய்துவென்;-
     வான் உடையாய்!'

    வான் உடையாய் - சுவர்க்க நாட்டை உடைய இந்திரனே!; சிறு
காலை இலா -
சிறிய பொழுது இல்லாததும்; நிலையோ திரியா - இடம்
விட்டுப் பெயராததும்; குறுகா - காலத்தால் குறுகிப்போகாததும்; நெடுகா -
அக்காலத்தில் பெருகி நீளாததும்; குணம் வேறுபடா - தன்மையில்
மாறுபடாததும்; உறு கால் கிளர் பூதம் எலாம் உகினும் - பொருந்திய
காற்றுமுதலாக விளங்கும் ஐம்பூதங்கள் எல்லாம் விழுந்து அழிந்தாலும்;
மறுகா நெறி எய்து வென் -
அழியாத முத்தி நெறியை அடைவேன்
(என்றான்).

     மறுகா நெறி - மாறாத முத்தி நெறி என்பது மற்ற பதவிகளை விட
மேலானது. மற்றவை உருவாலும்காலத்தாலும் தன்மையாலும் பல
மாறுபாடுகள் அடையும். இதுவோ அத்தகைய மாறுபாடு அடையாது. இதனைச்
சடாயு 'பூதங்கள் விளியும் நாளும் போக்கிலா உலகம் புக்க' (3530) நிலையுடன்
ஒப்பிடத்தக்கது.இதில் சரபங்கரின் உறதிப்பாடு புலனாகிறது.            20

இந்திரன் வந்திருத்தலை இராமன் உய்த்து உணர்தல்

2607.என்று, இன்ன விளம்பிடும்
     எல்லையின் வாய்,
வன் திண் சிலை வீரரும்
     வந்து அணுகா,