பக்கம் எண் :

இராவணன் சூழ்ச்சிப் படலம் 539

படம் குறைந்து ஒதுங்கின,
     பாம்பும்;-பாதகக்
கடுந் தொழில் அரக்கனைக்
     காணும் கண்ணினே.

    பாதகக் கடுந்தொழில் அரக்கனைக் காணும் கண்ணின் -
பெரிய பாவத்திற்குரிய கொடிய செயலைச் செய்ய வந்த அரக்கனாம்
இராவணனை அங்குக் கண்ட போது; மலைகளும் மரனும் நடுங்கின-
அங்கிருந்த மலைகளும் மரங்களும் நடுக்கம் கொண்டன;
பறவையும் நா அவிந்து அடங்கின - பறவைகளும் கூவாமல்
அடங்கி விட்டன; விலங்கும் அஞ்சின - கொடிய காட்டு
மிருகங்களும் பயப்பட்டன; பாம்பும் படம் குறைந்து ஒதுங்கின -
கொடிய பாம்புகளும் படமெடுப்பதை விட்டு அஞ்சி அடங்கின. ஏ -
ஈற்றசை.

     பாதகக் கடுந்தொழில் - பிறர் மனை நயத்தலாகும். காணும்
கண்ணின் - காணும்பொழுது எனப் பொருள் கொள்ளப்பட்டது. மலை,
மரம், பறவை, விலங்கு, பாம்பு போன்றவை இராவணனைக் கண்டு
அஞ்சின. அவன் செய்யப் போகும் செயல்களால் சீதைக்கும்
இராவணனுக்கும் நடக்கப் போகும் தீங்குகளைக் குறிக்கும் அறிகுறி
எனலுமாம். கொடிய பாம்பும் படமவிந்து அடங்கிய நிலை அதனினும்
இராவணன் தீங்கு செய்ய வல்லவன் என்பதைக் குறிக்கும்.           35

தீயவன் வினாவும், தூயவள் விடையும்

3354.இருந்தவன், 'யாவது இவ் இருக்கை?
     இங்கு உறை
அருந் தவன் யாவன்?
     நீர் யாரை?' என்றலும்,
'விருந்தினர்; இவ் வழி
     விரகு இலார்' என,
பெருந் தடங் கண்ணவள்
     பேசல் மேயினாள்:

    இருந்தவன் - (மூங்கிலிருக்கையில் இருந்த) இராவண
சன்னியாசி; இவ் இருக்கை யாவது - இந்த இருப்பிடம் யாது?; இங்கு
உறை அருந்தவன் யாவன் -
இச்சாலையில் வாழும் அரிய முனிவன்
யார்?; நீர் யாரை - நீவிர் யார்?; என்றலும் - எனக் கேட்டதும்;
இவ்வழி விருந்தினர் - இங்கு வந்த புதியவர் ஆவர்; விரகு இலார்-
வஞ்சகம் அற்றவர்; என(ப்) பெருந் தடங் கண்ணவள் பேசல்
மேயினாள் -
என்று நினைத்துப் பெரிய நீண்ட கண்களை உடைய
சீதை (இராவணனுடன்) பேசத் தொடங்கினாள்.

     விருந்தினர் - புதிதாக வந்த அதிதி ஆவர். விரகு - என்பதைக்
கபடம் எனவும் இங்கு வழி அறியாதவர் எனவும் உரைப்பர்.
பாலகாண்ட நாட்டுப் படலத்தில் விருந்தோம்பும் மங்கையர் மாண்பு
பற்றிக் கூறும் போது