பக்கம் எண் :

இராவணன் சூழ்ச்சிப் படலம் 549

     நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்வது போல் முனிவர்
வாழும் காட்டில் அன்றோ முனிவராகிய நீர் தங்கியிருக்க வேண்டும்.
அவ்வாறில்லாவிடில் தூய மக்கள் வாழும் புனித நகர்க்குச்
செல்லவாவது எண்ணியிருக்க வேண்டும். அச்செயல்களைச்
செய்யாமல் பாவமே புரியும் அரக்கர் கூட்டத்தில் தங்கியதால் பெரும்
அநீதி செய்தீர் எனச் சொல்லாமல் சொல்கிறாள் சீதை.

     நிலத்தியல் பால் நீர் திரிந்தற்றாகு மாந்தர்க்கு
இனத்தியல்பதாகும் அறிவு (குறள். 452) என்பதற்கிணங்க முனிவர்
வேடத்திலிருப்பினும் அவர் கூடி வாழ்ந்த இனத்தவர்களின் அவர் மன
அறிவும் திரிந்திருக்கும் எனச் சீதை சுட்டுகிறாள். இதனை 'இனத்திடை
கைகினிர்' என்ற தொடரால் அறியலாம்.                          50

3369.மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு
     இலான், "மறுவின் தீர்ந்தார்,
வெங் கண் வாள் அரக்கர்" என்ன
     வெருவலம்; மெய்ம்மை நோக்கின்,
திங்கள் வாள் முகத்தினாளே!
     தேவரின் தீயர் அன்றே;
எங்கள் போலியர்க்கு நல்லார்
     நிருதரே போலும்' என்றான்.

    மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு இலான் - சீதை
அச் சொல் கூறி அறிவுறுத்தியது கேட்ட எல்லை கடந்து
ஒழுகுவோனாம் இராவணன்; மறுவின் தீர்ந்தார் வெங்கண் வாள்
அரக்கர் என்ன வெருவலம் -
குற்ற மற்றவர் கொடியவர்களாம்
வாள் வீசும் இராக்கதர் எனக் கூறியதும் அஞ்ச மாட்டோம்;
மெய்ம்மை நோக்கின் - உண்மையாக ஆராயின்; திங்கள் வாள்
முகத்தினாளே -
சந்திரன் போல் ஒளி படைத்த முகமுடையவளே!;
தேவரின் தீயர் அன்றே - (அவ்வரக்கர்கள்) தேவர்களைக்
காட்டிலும் கொடியவர் அல்லரே; எங்கள் போலியர்க்கு நிருதரே
நல்லார் போலும் என்றான் -
எங்கள் போல்வார்க்கு அரக்கர்களே
நல்லவர் என்று சொன்னான்.

     வரம்பு இலான் - வலிமை வரம் போன்றவை பெற்றுப் பிறரை
விடச் சிறந்தவனாயினும் அறவொழுக்கம் என்ற எல்லையைக்
கடந்தவன். வெங்கண் - கொடுமை; கொடிய கண்களை உடையவர்கள்
என்றுமாம். வெருவுதல் - அஞ்சி நடுங்குதல். தேவரின் - தேவர்
போல எனவும் ஆம். போலியர் என்ற சொல்லில் இராவணனின்
போலி வேடமும் தொனிப் பொருளாய் விளங்குகிறது. துறவிகள்
சமநிலை உடையவராதலால் தேவர்க்கும் அரக்கர்க்கும் வேறுபாடு
கருதோம் எனக் கூறியதாகவும் கொள்வர். போலும் : ஒப்பில் போலி.    51

3370.சேயிழை-அன்ன சொல்ல,- 'தீயவர்ச்
     சேர்தல் செய்தார்
தூயவர் அல்லர், சொல்லின், தொல் நெறி
     தொடர்ந்தோர்' என்றாள்;