பக்கம் எண் :

552ஆரணிய காண்டம்

3373.மானவள் உரைத்தலோடும்,
     'மானிடர், அரக்கர்தம்மை,
மீன் என மிளிரும் கண்ணாய்! வேர்
     அற வெல்வர் என்னின்,
யானையின் இனத்தை எல்லாம் இள
     முயல் கொல்லும்; இன்னும்,
கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை
     மான் கொல்லும்' என்றான்.

    மானவள் உரைத்தலோடும் - பெருமை மிக்க சீதை இவ்வாறு
கூறியவுடன், (இராவணன்); மீன் என மிளிரும் கண்ணாய் - மீன்
போலப் பிறழ்ந்து ஒளிவிடும் கண்ணை உடையவளே!; அரக்கர்
தம்மை மானிடர் வேர் அறவெல்வர் என்னின் -
இராக்கதர்களை
மனிதர் அடி வேரில்லாமல் வெற்றி கொள்வார்கள் என்றால்;
யானையின் இனத்தை எல்லாம் இளமுயல் கொல்லும் - யானைக்
கூட்டம் அனைத்தையும் இளைய முயல் கொன்று விடும்; இன்னும்
கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும் என்றான்
-
மேலும் வளைந்த நகமுடைய ஆண் சிங்கங்களின் கூட்டத்தை மான்
கொன்று விடும் என்று கூறினான்.

     மானவன் என்பதன் பெண்பால் மானவள், மான்போன்ற
மருண்ட பார்வையுடையவள் என்றுமாம். மிளிர்தல் - ஒளிவிடுதல்
யானையை முயல் கொல்லுதலும் சிங்கத்தை மான் கொல்லுதலும்
உலகில் நடவாதன. எனவே அரக்கரை மனிதர் கொல்லுதல் நடவாத
செயல் ஆகும்.

     எனவே, இப்பாடலில் பொய்த்தற் குறிப்பு உளது.              55

3374.'மின் திரண்டனைய பங்கி
     விராதனும், வெகுளி பொங்கக்
கன்றிய மனத்து வென்றிக்
     கரன் முதல் கணக்கிலோரும்,
பொன்றிய பூசல் ஒன்றும் கேட்டிலிர்
     போலும்' என்றாள்-
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி, மழைக்
     கண்நீர் அருவிசோர்வாள்.

    (அதைக் கேட்ட சீதை) மின்திரண்டனைய பங்கி விராதனும் -
மின்னல்கள் ஒன்று திரண்டன போலச் சிவந்த தலைமயிருடைய
விராதனும்; வெகுளி பொங்கக் கன்றிய மனத்து வென்றிக் கரன்
முதல் கணக்கிலோரும் -
சினம் மிகுந்து காய்ந்து முதிர்ந்த மனத்தை
உடைய வெற்றிமிக்க கரன் முதலான எண்ணற்ற அரக்கர்களும்;
பொன்றிய பூசல் ஒன்றும் கேட்டிலிர் போலும் என்றாள் - இறந்த
போது எழுந்த பேராரவாரத்தை நீர் ஒரு