பக்கம் எண் :

564ஆரணிய காண்டம்

     அவன் வந்து தறைவாய் அடி தாழுதலும் - அந்த
இராவணன் சீதை முன் வந்து அவள் திருவடி நோக்கித் தரையில்
விழுந்து வணங்கவும்; கறைவாள் பட ஆவி கலங்கினள் போல் -
இரத்தக் கறை படிந்த வாள் தன் மீது பட உயிர் குலைந்து
துன்புற்றவள் போல; இறைவா இளையோய் என - என் தலைவனே!
அவர் தம்பியாம் இலக்குவனே! என வாய் விட்டுக்கதறி; பொறை
தான் உரு ஆனது 'ஓர் பொற்பு உடையாள்' ஏங்கினள் -
பொறுமையே ஓர் வடிவம் போன்ற தன்மையுடையவளாம் சீதை ஏக்க
முறுவாள்; ஆல் - அசை.

     தறை - தரை. பாயிரத்தில் 'மடப் பிள்ளைகள் தறையில் கீறிடின்
தச்சரும் காய்வரோ?' (9) என்பது போல் இங்கும் எதுகை நோக்கி
வல்லின றகரமாகத் திரிந்துள்ளது. இராவணன் நிலத்தின் மீது தான்
விழுந்தான். அச் செயல் வாளொன்று தன் உடல்மேல் பட்டது போல்
உயிர் கலங்கினாள் சீதை. இச் செயல் அவளது பண்பைக் காட்டும்.
'பொறை தான் உருவாய தொர் பொற்பு' என்பதும் 'இரும் பொறை
என்பது ஒன்றும்... களிநடம் புரியக் கண்டேன்' எனும் அனுமன்
கூற்றிலும் (6035) வெளிப்படும்.

     இப்பாடலும் பின்வரும் எட்டுப் பாடல்களும் அவலச் சுவையை
வெளிப்படுத்துவன.                                            71

இராவணன் பன்னசாலையோடு சீதையை எடுத்தல்

3390. ஆண்டு, ஆயிடை, தீயவன் ஆயிழையைத்
தீண்டான், அயன் மேல் உரை சிந்தைசெயா;
தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால்,
கீண்டான் நிலம்; யோசனை கீழொடு மேல்.

    ஆண்டு ஆயிடை தீயவன் - அப்பொழுது அவ்விடத்தில் அத்
தீயவனாம் இராவணன்; அயன் மேல் உரை சிந்தை செயா -
பிரமன் முன்னரிட்ட சாபத்தை மனத்தில் எண்ணி; ஆயிழையைத்
தீண்டான் -
அணிகலன்கள் அணிந்த சீதையின் திருமேனியைத்
தொடாதவனாகி; தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால் -
கல்தூண்கள் தாம் என்று கூறத்தக்க உயர்ந்த தோள்களின்
வலிமையால்; நிலம் கீழொடு மேல் யோசனை கீண்டான் - சீதை
இருந்த பூமியின் கீழேயும் பக்கங்களிலும் ஆக ஒரு யோசனை அளவு
பெயர்த்தெடுத்தான்.

     பிரமனிட்ட சாபம் பின்னர்ச் சடாயு உயிர் நீத்த படலத்திலும்
'தீண்ட அஞ்சுமால் ஆரியன் தேவியை அரக்கன் நல்மலர் பேர் உலகு
அளித்தவன் பிழைப்பு இல்சாபத்தால்' (3458) எனவும் கூறப் பெறும்.
இராவணனுக்கு வேதவதி, அரம்பை, நரி கூபரன், புஞ்சிகத்தலை
ஆகியோராலும் சாபங்கள் உண்டு. நிலத்தொடு பெயர்த்தெடுத்த செய்தி
கம்பரின் படைப்பு. இவ்வாறு படைத்தது மட்டுமின்றி நூலில் பல
இடங்களில் இதனைக் கூறியுள்ளார். யோசனை என்பது ஒரு காத
தூரம் எனவும் நாற்காததூரம் எனவும் கூறுவர்.

     குபேரனின் அளகாபுரியில் அரம்பையை இராவணன் கற்பழித்த
போது அவள் இட்ட சாபம் 'வலிய ஒரு பெண்ணைத் தீண்டின் அவள்
கற்புக்