கனலால் எரிவாய் என்பதாம் இவ்வாறே நளகூபனும் புஞ்சிகத்தலையும் சாபம் இட்டனர் என்பர். இவ்வாறு இராவணன் பெற்ற சாபம்பற்றிப் பல கதைகள் உள. இக் காண்டத்தின் முதற் படலத்தில் விராதன் பிராட்டியைப்பற்றித் தூக்கிச் செல்லும் செய்தி வருவது நினையத்தக்கது. வான்மீகஇராவணன் தீண்டிக் கவர்தலுக்கும் விராதன் தீண்டிக் கவர்தலுக்கும்வேற்றுமை உண்டு. இவன் காம வயத்தனாய்ப் பெண்மை சிதைக்கநினைப்பவன்; அவனோ விலங்கு நிலையிலனனாய் உணவுக்குஅலைபவன். விலங்கு நிலையினும் கொடியது காமக் கடுங்கனல்என்பது கருத்துப் போலும். இவ் ஒப்பீடு நெடிது நினைதற்கு உரியது. 72 3391. | கொண்டான் உயர் தேர்மிசை; கோல் வளையாள் கண்டாள்; தனது ஆர் உயிர் கண்டிலளால்; மண்தான் உறும் மின்னின் மயங்கினளால்; விண்தான் வழியா எழுவான் விரைவான். |
உயர் தேர் மிசைக் கொண்டான் - (அவ்வாறு பெயர்த்த நிலத்தை) உயர்ந்த தன் தேர் மேல் வைத்துக் கொண்டான்; கோல் வளையாள் கண்டாள் - (அச் செயலை) அழகிய வளையணிந்த சீதை பார்த்தாள்; தனது ஆருயிர் கண்டிலள் - தன்னுடைய அரிய உயிரைக் காணவில்லை; மண் உறும் மின்னின் மயங்கினள் - தனக்குரிய நிலமாம் மேகத்தை விட்டுத் தரையில் விழுந்த ஒரு மின்னற் கொடி போலக் கலங்கினாள் (அப்போது இராவணன்); விண் வழியா எழுவான் விரைவான் - ஆகாய வழியாக விரைவிற் செல்லக் கருதினான். ஆல் இரண்டும் அசை; தான் இரண்டும் அசை. கோல் வளை - அழகிய வேலைப்பாடுகள் அமைந்த வளை. கோல் - திரட்சியும் ஆம். வார்கோல் செறிய (புறம். 36) கோனிற வளையினார்க்கு (சீவக. 209) எனவரும். தேர் நிலத்தின் மீது சிறிதுதூரம் சென்றதை வயவர் பூமி மேல் அவன் தேர் சென்ற நெடுநெறிபோனார் (3479) என்பதில் காணலாம். மண்உறுமின் -இல்பொருளுவமை. 73 சீதையின் அரற்றல் 3392. | 'விடு தேர் என, வெங் கனல் வெந்து அழியும் கொடிபோல் புரள்வாள்; குலைவாள்; அயர்வாள்; துடியா எழுவாள்; துயரால் அழுவாள்; |
|