வினைகள் "எருவையின் மன்னன வந்தனன்" என்னும் ஆறாம்செய்யுளில் முடியும். வீரத்துண்டத்தன் - வலிய அலகினை உடையவன்என்க. 1 3404. | பாழி வன் கிரிகள் எல்லாம் பறித்து, எழுந்து, ஒன்றோடு ஒன்று பூழியின் உதிர, விண்ணில் புடைத்து, உறக் கிளர்ந்து பொங்கி, ஆழியும் உலகும் ஒன்றாய் அழிதர, முழுதும் வீசும் ஊழி வெங் காற்று இது என்ன, இரு சிறை ஊதை மோத, |
பாழிவன் கிரிகள் எல்லாம் - பெரு வலி உடைய மலைகள் எல்லாம்; பறித்து எழுந்து - வேருடன் பறிக்கப்பட்டு மேல் எழுந்து; ஒன்றோடு ஒன்று விண்ணில் புடைத்து - ஒன்றுடன் ஒன்று ஆகாயத்தில் மோதி; பூழியின் உதிர - புழுதி போலப் பொடியாய்ச் சிந்திச் சிதற; உறக் கிளர்ந்து பொங்கி - மிகுதியாக எழுந்து பொங்கி; ஆழியும் உலகும் ஒன்றாய் அழிதர - கடலும் உலகமும் ஒன்றாகி அழிந்து பட; முழுதும் வீசும் ஊழி வெங்காற்று - உலகம் முழுவதும் வீசும் ஊழிக் காலத்துக் கொடிய காற்று; இது என்ன - இது தான் என்று சொல்லுமாறு; இரு சிறை ஊதை மோத - (தன்) இரு சிறகுகள் (அடித்தலால்) (உண்டாகும்) பெருங்காற்று வீச. சடாயு இராவணனை எதிர்த்துத் தடுக்க வரும்போது ஊழிக் காலத்துப் பெருங்காற்றுப் போல் இரு சிறை ஊதை மோதியதால் மலைகள் நிலை பெயர்ந்து ஒன்றோடு ஒன்று தாக்கிப் பொடிபட்டன. கடலும் பூமியும் ஒன்றாகி அழிந்து பட்டன என்றவாறு. பாழி - வலிமை பூழி - பொடி, புழுதியுமாம். சிறை - சிறகு, ஊதை - காற்று. பாழிவன் - ஒரு பொருட் பன்மொழி. 2 கலிவிருத்தம் 3405. | சாகை வன் தலையொடு மரமும் தாழ, மேல் மேகமும் விண்ணின் மீச் செல்ல, 'மீமிசை மாக வெங் கலுழன் ஆம் வருகின்றான்' என, நாகமும் படம் ஒளித்து ஒதுங்கி நையவே. |
(சடாயுவின் சிறகில் இருந்து வீசும் பெருங்காற்றினால்) மரமும் - மரங்களும்; சாகை வன் தலையொடு தாழ - கிளைகளோடு வலிய தலைப்புறத்துடன் (பூமியில்) படியவும்; மேல் மேகமும் - மேல் இடத்தில் உள்ள மேகங்களும்; விண்ணின் மீச் செல்ல - வானத்தின் மேல் ஒதுங்கிப் போகவும்; மீமிசை மாக வெங் கலுழன் ஆம் வருகின்றான் என - மிக உயர்ந்த வான் வழியில் பெருமை உடைய கொடிய கருடன் வருகின்றான் என்று எண்ணி; நாகமும் படம் ஒளித்து - நாகங்களும் படத்தை ஒடுக்கிக் |