பக்கம் எண் :

சடாயு உயிர் நீத்த படலம் 577

பெயர்த்து உயர்ந்த தேரில் வைத்தவனாய்; எங்கு ஏகுவது - நீஎங்குப்
போக முடியும்; வானினோடு இத்தனை திசையையும் -வானத்தோடு
(மற்றுமுள்ள) இத்தனை திசைகளையும்; ஈண்டுமறைப்பென் எனா -
இப்பொழுதே மறைத்து விடுவேன் என்றுசொல்லி; பத்திரச் சிறைகளை
விரிக்கும் பண்பினான் -
பாதுகாப்புச்(செய்ய உரிய) சிறகுகளை விரித்துப்
பரப்புகிற உயர் பண்புஉடையவனாய் எருவையின் மன்னன் வந்தனன்"
எனப் பொருள்முடிக்க.

     'உத்தமன் தேவியை உலகொடு பெயர்த்துக் கொண்டு தேரில்வைத்து
நீ போவது எங்கே' என்று கூறி, தான் வானையும்திசைகளையும் இப்போதே
மறைப்பவன் போலத் தன் பாதுகாப்பானசிறகுகளை விரித்தபடி சடாயு
வந்தனன் என்க. உலகொடு என்பதைத்தேருக்கு ஆக்கி உலகத்தோடொப்ப
ஓங்கு தேர். "கீண்டான் நிலம்;யோசனை கீழொடு மேல்" (3390),
"கொண்டான் உயர் தேர் மிசை"(3391) என்றும், "தீண்டுற்றிலன் என்று
உணர் சிந்தையினான். (3409)என்றும் முன்னும் பின்னும் கவிஞர்
குறிப்பிட்டுள்ளதால் ஈண்டுநிலத்தொடு என்பதே பொருந்தும் என்க.
பத்திரம் - பாதுகாப்பு,வைத்தனை - முற்றெச்சம்.                     5

3408. வந்தனன்-எருவையின் மன்னன்;
     மாண்பு இலான்
எந்திரத் தேர் செலவு
     ஒழிக்கும் எண்ணினான்;
சிந்துரக் கால், சிரம்,
     செக்கர் சூடிய
கந்தரக் கயிலையை
     நிகர்க்கும் காட்சியான்.

    மாண்பு இலான் - நல்ல பண்புகள் இல்லாதவனாகிய
இராவணனது; எந்திரத்தேர் - எந்திரங்கள் பொருத்தப்பட்ட தேரின்;
செலவு ஒழிக்கும் - செல்லுதலைத் தடுக்கும்; எண்ணினான் -
கருத்தினைக் கொண்டவனும்; சிந்துரக் கால்சிரம் - சிந்தூரம் போல்
மிகச் சிவந்த கால்களையும் தலையையும்; செக்கர் சூடிய கந்தரம் -
செவ்வானத்தின் நிறத்தைக் கொண்ட கழுத்தினையும் உடையவனாகி;
கயிலையை நிகர்க்கும் காட்சியான் - கைலாய மலையை ஒக்கின்ற
தோற்றத்தை உடையவனாய்; எருவையின் மன்னன் வந்தனன் -
கழுகுகளுக்கு அரசனாகிய சடாயு, (இராவணனுக்கு எதிரில்) வந்து
சேர்ந்தான்.

     சடாயு இராவணன் தேர் செல்லுதலைத் தடுக்கும் கருத்துடன்
சிவந்த கால்களோடும் தலையோடும் செக்கர் வானம் போன்ற
கழுத்தோடும் கைலாய மலையை ஒக்கின்ற தோற்றத்தோடும்
இராவணன் எதிரில் வந்தனன். எந்திரம் - பொறி; சக்கரம் என்றும்
கூறுவர். சிந்துரம் - செந்தூரம் சிவப்பு நிறம் உடையது. கந்தரம் -
கழுத்து. என்னும் அவ்வேலையின் கண் சொல்லன், கண்ணன்,
துண்டத்தன், மெய்யன், கிரிகள் பூழியின் உதிர, ஆழியும் உலகும்