பக்கம் எண் :

578ஆரணிய காண்டம்

ஒன்றாய் அழிதர, இரு சிறை ஊதை மோத, மரமும் தாழ, மேகம்
விண்ணின் மீச் செல்ல, நாகம் ஒதுங்கி நைய, வானமும் கானமும்
மாறு கொள்ள, திசையையும் மறைப்பென் எனா, எண்ணினான்.
காட்சியான் - எருவையின் மன்னன் வந்தனன் எனக் குளகமாக வந்த
ஆறு பாடல்களுக்கும் முடிபு கொள்க.                             6

சடாயு இராவணனுக்கு அறிவுரை கூறல்

3409. ஆண்டு உற்ற அவ் அணங்கினை,
     'அஞ்சல்' எனா,
தீண்டுற்றிலன் என்று
     உணர் சிந்தையினான்,
மூண்டுற்று எழு வெங்
     கதம் முற்றிலனாய்,
மீண்டுற்று,
     உரையாடலை மேயினனால்:

    ஆண்டு உற்ற - அந்த இடத்திற்கு வந்த; அவ் அணங்கினை-
அந்தச் சீதையை; அஞ்சல் எனா - (நீ) அஞ்சாதே என்று (சடாயு)
கூறி; தீண்டுற்றிலன் என்று உணர்சிந்தையினான் - (இராவணன்
அவளைத்) தொட்டான் இல்லை என்று உணர்ந்த மனத்தினை
உடையவனாய்; மூண்டு உற்று எழு வெங்கதம் முற்றிலனாய் -
பொங்கி எழுகின்ற கொடிய சினம் முதிராதவனாய்; மீண்டுற்று -
மீண்டும்; உரையாடலை மேயினன் - (இராவணனை நோக்கி)
உரையாடலைத் தொடங்கினான். ஆல் - ஈற்றசை.

     சீதைக்கு 'அஞ்சல்' என அபயம் கூறிய சடாயு, இராவணன்
அவளைத் தீண்டவில்லை என்பதை உணர்ந்து சினத்தை அடக்கிக்
கொண்டு அவனை நோக்கிப் பேசத் தொடங்கினான். தீண்டுற்றிலன் -
தீண்டினான் இல்லை, கதம் - சினம். மீண்டுற்று - மீண்டும் இப்
படலத்தின் முதல் பாடலில் "எங்கு அடா போவது" "நில்நில் என்று
இடித்த சொல்லன்" என்று சடாயு இராவணனை நோக்கிக் கூறியதாக
வந்துள்ளதால் இங்குச் சடாயு கூறுவதை மீண்டுற்று உரையாடலை
மேயினனால் என்றார்.                                      7

3410.'கெட்டாய் கிளையோடும்; நின்
     வாழ்வை எலாம்
சுட்டாய்; இது என்னை
     தொடங்கினை? நீ
பட்டாய் எனவே
     கொடு பத்தினியை
விட்டு ஏகுதியால்,
     விளிகின்றிலையால்.