பக்கம் எண் :

சடாயு உயிர் நீத்த படலம் 583

     திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளின் அருளால் நீ பெற்றுள்ள
வரமும் மற்றும் உன்னிடம் உள்ள மாயப் போர் ஆற்றலும்
உண்மையினோன் வில்லில் அம்பு கோத்து விடும் அளவே நிற்கும்,
அதற்கு மேல் நில்லா என்பதாம். உண்மையினோன் - சொன்ன
சொல்லை நிறைவேற்றும் வாய்மை உடையோன் எனலுமாம். விஞ்சை-
வித்தை சாபம் - வில், உம் - அசை.                              15

3418.'வான் ஆள்பவன் மைந்தன்,
     வளைத்த விலான்
தானே வரின், நின்று
     தடுப்பு அரிதால்;
நானே அவண் உய்ப்பென்,
     இந் நன்னுதலை;
போ, நீ கடிது'
     என்று புகன்றிடலும்,

    வான் ஆள்பவன் மைந்தன் - விண் உலகை ஆளும்
தசரதனுடைய மகனாகிய இராமன்; வளைத்த விலான் தானே வரின்
-
வளைத்த வில்லினை உடையவனாய் (நேரில்) தானே வந்து
விட்டால்; நின்று தடுப்பு அரிது - அவன் எதிரே நின்று (அவனால்
வரும் தீங்கினைத்) தடுப்பது அருமையானது; இந்நன்னுதலை - இந்த
அழகிய நெற்றியை உடைய சீதையை; அவண் நானே உய்ப்பென் -
முன்பு இருந்த இடத்திற்கு நானே கொண்டு போய்ச் சேர்க்கிறேன்; நீ
கடிது போ -
நீ விரைவாகப் போய்விடு; என்று புகன்றிடலும் -
என்று சடாயு கூறிய அளவில் - கேட்டான் (நிருதர்க்கு இறை என
அடுத்த பாடலில் முடியும்).

     இராமன் வந்தால் நீ தப்ப முடியாது எனவே இப்பொழுதே
சீதையை என்னிடம் விட்டு விட்டு, நீ போய் விடு; நான் அவளை
முன்பு இருந்த இடத்திலேயே சேர்த்து விடுகிறேன் என
இராவணனிடம் சடாயு கூறினான். வான் ஆள்பவன் - முன்பு
நிலவுலகை ஆண்டவன் தற்போது வானுலகை ஆள்கிறான் என்பதாம்.
தடுப்பு - தடுத்தல், விலான் - இடைக்குறை, முற்றெச்சம் எனலுமாம்.
நன்னுதல் - பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.
ஆல் - அசை.                                          16

இராவணன், "சீதையை விடேன்" எனல்

3419.கேட்டான் நிருதர்க்கு இறை; கேழ்
     கிளர் தன்
வாள் தாரை நெருப்பு
     உக, வாய் மடியா,
'ஓட்டாய்; இனி நீ
     உரை செய்குநரைக்
காட்டாய் கடிது' என்று,
     கனன்று உரையா,