பக்கம் எண் :

சடாயு உயிர் நீத்த படலம் 593

மூலம் ஒடிப்புண்டது கண்டு,
     முனிந்த நெஞ்சன்,
ஆலம் மிடற்றான் புரம் அட்டது
     ஓர் அம்பு போலும்
சூலம் எடுத்து ஆர்த்து எறிந்தான்,
     மறம் தோற்றிலாதான்.

    ஞாலம் படுப்பான் - உலகுக்கு அழிவைச் செய்பவனும்; மறம்
தோற்றிலாதான் -
யாருக்கும் வீரத்தில் தோல்விஅடையாதவனும்
ஆகிய இராவணன்; தனது ஆற்றலுக்கு ஏற்ற - தனது வலிமைக்குப்
பொருத்தமான; நல்வில் மூலம் ஒடிப்புண்டது கண்டு - நல்ல
(வலிய) வில் முழுதும் ஒடிக்கப்பட்டது கண்டு; முனிந்த நெஞ்சன் -
சினமடைந்த நெஞ்சத்தனாய்; ஆலம் மிடற்றான் புரம் அட்டது ஓர்
அம்பு போலும் -
ஆலகால நஞ்சை மிடற்றில் கொண்ட (நீலகண்டன்)
முப்புரத்தை அழிப்பதற்காகக் (கைக் கொண்ட) ஒப்பற்ற (திருமால்
ஆகிய) அம்பு போன்ற; சூலம் எடுத்து ஆர்த்து எறிந்தான் -
சூலப்படையைக் (கையில்) எடுத்துப் பேரொலியோடு (சடாயுவின் மீது)
வீசினான்.

     இராவணன் தனது வலிய வில் சடாயுவால் ஒடிக்கப்பட்டது
கண்டு முனிவு கொண்டு, நீலகண்டன் முப்புரம் எரிக்கக் கைக்
கொண்ட திருமாலாகிய அம்பு போன்ற சூலத்தை எடுத்துச் சடாயுவின்
மீது எறிந்தான் என்க. மூலம் - முழுதும்,                         31

3434.'ஆற்றான் இவன் என்று உணராது
     எனது ஆற்றல்காண்' என்று
ஏற்றான் எருவைக்கு இறை, முத்தலை
     எஃகம், மார்பில்;
'மேல்தான் இது செய்பவர் யார்?',
     என விண்ணுளோர்கள்
தோற்றாது நின்றார், தம தோள்
     கொட்டி ஆர்த்தார்.

    எருவைக்கு இறை - கழுகுகளுக்குத் தலைவன் ஆகிய சடாயு;
இவன் ஆற்றான் என்று உணராது - இவன் (இச்சூலத்திற்கு)
ஆற்றான் என எண்ணாதே; எனது ஆற்றல் காண் - எனது
வலிமையைப் பார்; என்று - என்று கூறி; முத்தலை எஃகம் -
(இராவணன் வீசிய) மூன்று தலைகளை உடைய அச் சூலத்தை;
மார்பில் ஏற்றான் - (தன்) மார்பில் ஏற்றுக் கொண்டான்; தோற்றாது
நின்றார் விண்ணுளோர்கள் -
(இராவணனிடம் கொண்ட அச்சத்தால்)
வெளிப்படாமல் மறைந்திருந்த தேவர்கள்; மேல் தான் இது
செய்பவர் யார் என -
இனிமேல் இத்தகு செயலைச் செய்பவர்யாவர்