எருவைக்கு இறை - கழுகுகளுக்குத் தலைவன் ஆகிய (சடாயு); மால்வரை போல - பெரிய மலை விழுந்தது போல; மண் மேல்மறிந்தான் - மண் மேல் விழுந்தான். தேர்ப்பாகனது தலையைப் பறித்துத் தன் முகத்தின் மீது எறிந்த சடாயுவினது மன வலிமையை இராவணன் அறிந்து சினந்துபொன்னால் ஆகிய பெரிய கதையைக் கையில் கொண்டு நெருப்புப்பொறி பறக்க அடித்தான். அதனால் சடாயு பெரிய மலை போல் மண்மீது விழுந்தான். ஆடகத் தண்டு - பொன் மயமான கதை.முற்பாடலுடன் இதற்கு உள்ள அந்தாதித் தொடை காண்க. 35 | 3438. | மண்மேல் விழுந்தான் விழலோடும், வயங்கு மான் தேர், கண்மேல் ஒளியும் தொடராவகை, தான் கடாவி, விண்மேல் எழுந்தான்; எழ, மெல்லியலாளும், வெந் தீ புண்மேல் நுழையத் துடிக்கின்றனள் போல், புரண்டாள். |
மண் மேல் விழுந்தான் - சடாயு (இராவணனது பொற்கதையால் அடியுண்டு) நிலத்தின் மீது விழுந்தான்; விழலோடும்- (அவ்வாறு அவன்) விழுந்த அளவில்; வயங்கு மான் தேர் - விளங்குகிற குதிரைகள் பூட்டப்பட்ட (தனது) தேரை; கண் மேல் ஒளியும் தொடரா வகை - கண்ணினது பார்வையும் பின்பற்றிச் செல்ல முடியாதபடி; தான் கடாவி - மிக விரைவாகச் செலுத்தி; விண் மேல் எழுந்தான் - (இராவணன் இலங்கையை நோக்கிப் போக) வானத்தில் எழுந்தான்; எழ - (அவன் அவ்வாறு) எழுந்த அளவில்; மெல்லியலாளும் - மென்மைத் தன்மை உள்ள சீதையும்; புண் மேல் வெந்தீ நுழைய - புண்ணில் வெப்பமான நெருப்பு நுழைந்தால்; துடிக்கின்றனள் போல் புரண்டாள் - துடிப்பவள் போல் (துன்பத்தால்) புரண்டாள். இராவணனிடம் அடி வாங்கிய சடாயு நிலத்தில் விழுந்தவுடன்அவன் தன் தேரை விரைவாக வானத்தில் செலுத்திக் கொண்டுஇலங்கையை நோக்கிப் போகப் புறப்பட்டான். அது கண்டு சீதைபுண்ணில் தீ நுழைந்தது போல் துன்புற்று வருந்திப் புரண்டாள். கடாவி- செலுத்தி, 36 | 3439. | கொழுந்தே அனையாள் குழைந்து ஏங்கியகொள்கை கண்டான்; 'அழுந்தேல் அவலத்திடை; அஞ்சலை அன்னம்!' என்னா, | |