பக்கம் எண் :

சடாயு உயிர் நீத்த படலம் 597

எழுந்தான்; உயிர்த்தான்; 'அட! எங்கு
     இனிப் போவது?' என்னா,
விழுந்தான் அவன் தேர்மிசை,
     விண்ணவர் பண்ணை ஆர்ப்ப.

    கொழுந்தே அனையாள் - இளந்தளிர் போன்று (மிக்க
மென்மைத் தன்மை உடைய) சீதை; குழைந்து ஏங்கிய கொள்கை
கண்டான் -
வாடி வருந்திய செயலைக் கண்டவன் ஆகிய சடாயு;
அன்னம் - அன்னப்பறவை போன்றவளே; அவலத்திடை
அழுந்தேல் -
துன்பத்தில் மூழ்க வேண்டாம்; அஞ்சலை -
அஞ்சாதே; என்னா - என்று (ஆறுதல் கூறி); உயிர்த்தான்
எழுந்தான் -
பெருமூச்சு விட்டு எழுந்தான்; அட இனி எங்குப்
போவது என்னா -
அடே இனி (நீ) எங்கு (த் தப்பிப்) போவது
என்று சொல்லி; அவன் தேர்மிசை - அந்த இராவணனது தேரின்
மீது; விண்ணவர் பண்ணை ஆர்ப்ப - தேவர்களின் கூட்டம்
(மகிழ்ச்சிப்) பேரொலி செய்ய; விழுந்தான் - பாய்ந்தான்.

     மென்மைத் தன்மை உடைய கொழுந்து போன்ற சீதை
வருந்துதலைக் கண்ட சடாயு 'அன்னம், அஞ்சி அவலிக்காதே' என
ஆறுதல் கூறி இராவணனைப் பார்த்து 'அடே நீ எங்கே தப்பிச்
செல்வது' என்று கூறி, விண்ணவர் பண்ணை ஆர்ப்பத் தேர்மிசைப்
பாய்ந்தான். கொள்கை - செய்கை. பண்ணை - மகளிர்
விளையாட்டாயம். ஈண்டுக் கூட்டத்தைக் குறித்தது. அஞ்சலை -
முன்னிலை ஒருமை வினைமுற்று. அன்னம் - உவமையாகு பெயர்;
இங்கு அண்மை விளியாய் வந்தது.                              37

3440.பாய்ந்தான்; அவன் பல் மணித்
     தண்டு பறித்து எறிந்தான்;
ஏய்ந்து ஆர் கதித் தேர்ப் பரி
     எட்டினொடு எட்டும் எஞ்சித்
தீய்ந்து ஆசு அற வீசி, அத் திண் திறல்
     துண்ட வாளால்
காய்ந்தான்; கவர்ந்தான் உயிர்;
     காலனும் கைவிதிர்த்தான்.

    பாய்ந்தான் - (இராவணன் தேரின் மீது) பாய்ந்தவனாகிய
சடாயு; அவன் - அந்த இராவணனின்; பல் மணித் தண்டு பறித்து
எறிந்தான் -
பல மணிகள் பதிக்கப் பெற்ற தண்டாயுதத்தைப் பறித்து
வீசினான்; ஏய்ந்து ஆர் கதித்தேர் - பொருந்தி அமைந்த
வேகத்தினை உடைய தேரின் கண் பூட்டப்பட்டுள்ள; பரி
எட்டினொடு எட்டும் -
குதிரைகள் பதினாறும்; எஞ்சித் தீய்ந்து
ஆசு அற -
ஓங்கி அழிந்து ஒழியும் படி; அத்திண் திறல் துண்ட
வாளால் -
அந்த வலிமை உடைய மூக்காகிய தனது வாளால்;
காய்ந்தான் வீசி - சினந்து வீசி; உயிர் கவர்ந்தான் -
(அக்குதிரைகளின்) உயிரை