உண்டான்; காலனும் கை விதிர்த்தான் - அவ்வீரச் செயல் கண்டு யமனும் (அஞ்சிக்) கை நடுக்கம் கொண்டான். இராவணன் மேல் பாய்ந்த சடாயு தன்னைத் தாக்கிய தண்டாயுதத்தைப் பறித்து எறிந்து, மிக்க சினத்துடன் இராவணனது தேரில் பூட்டப்பட்டிருந்த பதினாறு குதிரைகளையும் உயிரொழித்தான். அது கண்டு யமனும் அச்சத்தால் நடுங்கினான். கதி - வேகம், துண்டவாள் - வாள் போல் கூர்மையான அலகு, கை விதிர்த்தான் - கை நடுக்கமுற்றான். 38 | 3441. | திண் தேர் அழித்து, ஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி விண்தான் மறைப்பச் செறிகின்றன, வில் இலாமை, மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின், வச்சைமாக்கள் பண்டாரம் ஒக்கின்றன, வள் உகிரால் பறித்தான். |
திண் தேர் அழித்து - (சடாயு மேலும் இராவணனது) வலிய தேரை அழித்து; ஆங்கு - அதற்குப் பிறகு; வில் இலாமை - (அவனது கையில்) வில் இல்லாமையால்; மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின் - நெருங்கிச் செய்யும் கொடிய போருக்கு உதவும் அம்புகளைத் தராமையால்; வச்சைமாக்கள் பண்டாரம் ஒக்கின்றன - உலோபிகளுடைய கருவூலத்தை ஒத்து அமைவனவாகி; விண்தான் மறைப்பச் செறிகின்றன - ஆகாயத்தைக் கூட மறைக்கும்படி பொருந்தி உள்ள; அவன் திண் புறம் சேர்ந்த தூணி - அவனது வலிமையான தோள்களின் புறத்தில் கட்டப்பட்டுள்ள, அம்பு அறாத் தூணியை; வள் உகிரால் பறித்தான் - (தன்) கூர்மையான நகங்களால் பறித்து எறிந்தான். சடாயு இராவணனது தேரை அழித்து, அவனது முதுகுப் புறத்தில் கட்டியுள்ள அம்பு அறாத் தூணியையும் பறித்து எறிந்தான். வச்சைமாக்கள் பண்டாரம் - கொடைக் குணமற்ற உலோபிகளின் கருவூலத்தில் பணம் இருந்தும் பிறர்க்குப் பயன்படாதவாறு போல இராவணன் கையில் வில் இலாமையால் அவனது அம்பறாத் தூணியில் அம்பு இருந்தும் அது பயன்படவில்லை என்றபடி. வச்சை மாக்கள் - உலோபிகள். பண்டாரம் - கருவூலம். திண் தேர் - பண்புத் தொகை. 39 | 3442. | மாச் சிச்சிரல் பாய்ந்தென, மார்பினும் தோள்கள் மேலும் ஓச்சி, சிறகால் புடைத்தான்; உலையா விழுந்து மூச்சித்த இராவணனும் முடி சாய்ந்து இருந்தான்; |
|