| | 'போச்சு; இத்தனை போலும் நின் ஆற்றல்?' எனப் புகன்றான். |
மார்பினும் தோள்கள் மேலும் - (பின்பு சடாயு இராவணன் உடைய) மார்பின் மேலும் (இருபது) தோள்கள் மேலும்; மாச்சிச்சிரல் பாய்ந்தென - பெரிய சிச்சிலிப் பறவை பாய்வது போல் (பாய்ந்து); சிறகால் ஓச்சிப் புடைத்தான் - (தன்) சிறகுகளால் விரைவாக எறிந்து அடித்தான்; இராவணனும் - அதனால் இராவணனும்; உலையா விழுந்து - வருந்தி விழுந்து; முடிசாய்ந்து மூச்சித்த இருந்தான் - தலை சாய்த்து மயங்கிய நிலையில் இருந்தான்; இத்தனை போலும் - (அத்தன்மை கண்டு சடாயு) இத்தனைதானா; நின் ஆற்றல் - உனது வலிமை; போச்சு எனப்புகன்றான் - போய் விட்டது என்று (இகழ்ச்சியாகக்) கூறினான். மாச்சிரல் பாய்வது போல் பாய்ந்து சடாயு இராவணனதுமார்பிலும் தோளிலும் தன் சிறகால் ஓச்சிப் புடைத்தான். அதனால்இராவணன் மூச்சற்றுத் தலை சாய்த்து மயங்கி, இருந்தான்; அது கண்டசடாயு 'இது தானா உன் வலிமை' என இகழ்ந்து கூறினான். சிரல் -சிச்சிலி, மீன் கொத்தி. போச்சு - போயிற்று பேச்சு வழக்கு உலையா -செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு வினை எச்சம். 40 | 3443. | அவ்வேலையினே முனிந்தான்; முனிந்து, ஆற்றலன்; அவ் வெவ் வேல் அரக்கன் விடல் ஆம் படை வேறு காணான்; 'இவ் வேலையினே, இவன் இன் உயிர் உண்பென்' என்னா, செவ்வே, பிழையா நெடு வாள் உறை தீர்த்து, எறிந்தான். |
அவ்வேலையினே - (உன் வலிமை போச்சு இத்தனை போலும் நின் ஆற்றல்) என்று (சடாயு கூறிய) அந்த நேரத்தில்; முனிந்தான் முனிந்து - (இராவணன்) சினம் கொண்டான் முனிந்து; ஆற்றலன் - (அச்) சினத்தை ஆற்றமுடியாதவனாகிய; அவ்வெவ்வேல் அரக்கன்- அந்தக் கொடிய வேலை ஏந்திய அரக்கன்; விடல் ஆம் படை வேறு காணான் - (சடாயுவின் மீது) விடுதற்கு உரிய படைக் கலங்கள் வேறு ஒன்றையும் காணாதவனாய்; இவ் வேலையினே - இப்பொழுதே; இவன் இன் உயிர் உண்பென் என்னா - இந்தச் சடாயுவினுடைய இனிய உயிரை உண்பேன் என்று சொல்லி; செவ்வே பிழையா நெடுவாள் - (பகைவரைக்) கொல்லுதல் தப்பாத நீண்ட தன் சந்திரகாசம் என்னும் வாளை; உறை தீர்த்து எறிந்தான் - உறையில் இருந்து (வெளியில்) எடுத்து வீசினான். |