பக்கம் எண் :

சடாயு உயிர் நீத்த படலம் 603

     அல்லல் உற்றேனை - பெருந்துன்பம் அடைந்தவளாகிய என்னை;
வந்து அஞ்சல் என்ற - (காக்க) வந்து அஞ்சாதே (என்று ஆறுதல் கூறிய);
இந்நல்லவன் தோற்பதே - இந்த நல்ல அறப் பண்புகள் உடையவன்
ஆகிய (சடாயு) தோல்வி அடைவதா?; நரகன் வெல்வதே - நரகைச்
சேர்தற்கு உரியான் ஆகிய (இராவணன்) வெல்வதா?; பாவமோ
வெல்வதும் -
பாவந்தானோ வெற்றி பெறுவது; வேதம் பொய்க்குமோ -
வேதம் விளக்கும் (அறம்) பொய்த்து விடுமோ?; அறம் இல்லையோ -
(இவ்வுலகில்) தருமம் இல்லாமல் போய்விட்டதோ; என இரங்கி ஏங்கினாள்-
என்று மனம் கலங்கிப் புலம்பினாள்.

     'என்னைப் பாதுகாக்க வந்த இந்த நல்லவன் தோல்வியடைய,
நரகத்தில் புகத்தகு தீச் செயல் செய்த இராவணன் வெல்வதா? தருமமே
வெல்லும் என்ற வேத மொழி பொய்த்து விட்டதோ? பாவம் தான் வெல்லும்
போலும். அறம் உலகில் இல்லையோ?' எனச் சீதை இரங்கி ஏங்கினாள்.
உற்றேனை - வினையாலணையும் பெயர். ஏகார ஓகாரங்கள் வினாப்
பொருளில் வந்து, இது மிகத் தகுதியில்லா நிலை என்பதை விளக்குகின்றன.
நரகன் - நரகத்தைச் சேர்தற்கு உரியனான இராவணன். தீமையின் அழிவில்
அவலம் இல்லை. அத்தீமையை அழிக்க நன்மைபடும் பெருந்துயரிலே
உள்ளதுதான் அவலம் என்பார் கூற்றை ஈண்டு உன்னுக.              46

3449.'நாண் இலேன் உரைகொடு
     நடந்த நம்பிமீர்!
நீள் நிலை அறநெறி
     நின்றுளோர்க்கு எலாம்
        ஆணியை, உந்தையர்க்கு
     அமைந்த அன்பனை,
காணிய வம்' என,
     கலங்கி விம்மினாள்.

    நாண் இலேன் உரை கொடு - நாணம் அற்றவளாகிய என்னுடைய
சொற்களைக் கேட்டு; நடந்த நம்பிமீர் - ('என்னைப் பிரிந்து) நடந்த
ஆடவர் திலகங்களே; நீள் நிலை அற நெறி - அழிவற்று நிலை
பெற்றுள்ள அற வழியில்; நின்றுளோர்க்கு எலாம் - ஊன்றி
நிற்பவர்களுக்கெல்லாம்; ஆணியை - உரையாணியை ஒத்தவனும்;
உந்தையர்க்கு அமைந்த அன்பனை - உங்கள் தந்தைக்குப் பொருந்திய
நட்பு உடையவனும் ஆகிய சடாயுவைக்; காணியவம் -
காண்பதற்காகவாவது வாருங்கள்; எனக் கலங்கி விம்மினாள் - என்று கூறி
மனம் கலங்கி விம்மி அழுதாள்.

     'என் சொற் கேட்டுப் பிரிந்தவர்களே அறத்தின் ஆணியை,
உந்தையர்க்கு அமைந்த உற்ற நண்பனைக் காணிய வருக' எனச் சீதை
கலங்கிக் கதறினாள். நாண் இலேன் உரை கொடு - இராமனிடம் மாய
மானைப் பற்றித் தரும்படி கேட்ட போது கூறிய