பக்கம் எண் :

606ஆரணிய காண்டம்

     சடாயு தேர்க் குதிரைகளைக் கொன்று (3438) தேர்ப் பாகனையும்
அழித்தமை (3436) யால் இராவணன் சீதையைத் தேரில் கொண்டு செல்ல
முடியாமையால் நிலத்தொடு பருத்த தோள் மீது ஏந்தி இலங்கையை
நோக்கிச் சென்றான் என இப்பாடலில் கவிஞர் கூறியுள்ளார். மீ - மேல்,
மண் - பர்ண சாலையொடு பெயர்த்து எடுக்கப்பட்ட மண். இதனை
"கீண்டான் நிலம் யோசனை கீழொடு மேல் (3390) கொண்டான் உயர் தேர்
மிசை (3391) என்ற கவிஞர் வாக்கால் அறிக.                       50

3453.விண்ணிடை வெய்யவன்
     ஏகும் வேகத்தால்,
கண்ணொடு மனம் அவை
     சுழன்ற கற்பினாள்,
உள் நிறை உணர்வு அழிந்து
     ஒன்றும் ஓர்ந்திலள்;
மண்ணிடை, தன்னையும்
     மறந்து, சாம்பினாள்.

    விண்ணிடை - வான வெளியில்; வெய்யவன் ஏகும் வேகத்தால் -
கொடியவன் ஆகிய இராவணன் செல்லுகின்ற வேகத்தினால்; கண்ணொடு
மனம் அவை -
கண்களும் மனமும் ஆகிய அவை; சுழன்ற கற்பினாள் -
சுழலும் கற்புடையவள் ஆன சீதை; உள் நிறை உணர்வு அழிந்து -
உள்ளத்தில் நிறைந்த அறிவு அழியப் பெற்று; ஒன்றும் ஓர்ந்திலள் -
யாதொன்றையும் உணர முடியாதவளாகி; மண்ணிடை தன்னையும் மறந்து
சாம்பினாள் -
நிலத்தில் தன்னையும் மறந்து மூர்ச்சை அடைந்து சோர்ந்து
கிடந்தாள்.

     இராவணன் வானவெளியில் மண்ணொடும் கொண்டு போன
வேகத்தால் சீதை கண்ணும் மனமும் சுழன்று அறிவு அழிந்து மயங்கி
விழுந்தாள். ஓர்ந்திலள் - முற்றெச்சம்.                             51

சடாயு வானம் நோக்கி இரங்குதல்

3454. ஏகினன் அரக்கனும்;
     எருவை வேந்தனும்,
மோக வெந் துயர் சிறிது
     ஆறி, முன்னியே,
மாகமே நோக்கினென்;
     வஞ்சன் வல்லையில்
போகுதல் கண்டு, அகம்
     புலர்ந்து சொல்லுவான்:

    அரக்கனும் - அரக்கனாகிய இராவணனும்; ஏகினன் - (மேல்
கூறியவாறு) சென்றான்; எருவை வேந்தனும் - கழுகுகளுக்கு அரசனாகிய