பக்கம் எண் :

608ஆரணிய காண்டம்

சிற்றவை வஞ்சனை,
     முடியச் செய்ததோ?

    வெற்றியர் உளர் எனின் - வெற்றி பெறும் (வலி படைத்த)
இராமலக்குவர் அங்கு இருந்திருப்பர் எனின்; மின்னின் நுண் இடை -
மின்னல் போல் விளங்குகிற நுண்மையான இடையையுடைய; பொன்-
தொடிக்கு -
பொன்னால் ஆகிய வளையலையும் (அணிந்த சீதைக்கு);
இந்நிலை புகுதற் பாலதோ - இப்படிப்பட்ட துன்பம் தரும் நிலை
நேர்ந்திருக்கக் கூடியதாகுமோ? (நேர்ந்திருக்காது என்றபடி); உற்றதை
இன்னது என்று -
அவர்களுக்கு நேர்ந்த நிலைமை இதுதான் என்று;
உணரகிற்றிலேன் - அறிகின்றிலேன்; சிற்றவை வஞ்சனை -
சிறியதாயாகிய கைகேயியினது சூழ்ச்சி; முடியச் செய்ததோ -
(அவர்களுக்கு இத்தகைய துன்பமாக) முடியுமாறு செய்ததோ என்றபடி.

     இராம இலக்குவர் அவ்விடம் இருந்திருந்தால் சீதைக்கு இத்தகு
கொடுமையான துன்பம் நேர்ந்திருக்காது. அவர்களுக்கு என்ன நேர்ந்தது
என்று எனக்குத் தெரியவில்லை. கைகேயியினது சூழ்ச்சி இவ்வாறு எல்லாம்
முடியச் செய்ததோ என்று சடாயு எண்ணினான். இன் - உவம உருபு.
பொன் தொடி - ஆகுபெயர்.                                   54

3457.'பஞ்சு அணை பாம்பணை
     ஆகப் பள்ளி சேர்
அஞ் சனவண்ணனே
     இராமன்; ஆதலால்,
வெஞ் சின அரக்கனால்
     வெல்லற்பாலனோ?
வஞ்சனை இழைத்தனன்,
     கள்ள மாயையால்.

    பாம்பணை பஞ்சு அணை ஆக - ஆதிசேடன் என்கிற பாம்புப்
படுக்கை பஞ்சு மெத்தை ஆக; பள்ளி சேர் - (அங்கு) திருவனந்தல்
செய்தருளுகிற; அஞ்சன வண்ணனே இராமன் - நீல வண்ணனே
இராமன்; ஆதலால் - ஆகையால், (அந்த இராமன்); வெஞ்சின
அரக்கனால் -
கொடிய சினம் உடைய அரக்கனாகிய (இராவணனால்);
வெல்லற் பாலனோ - வெல்லுவதற்கு உரியனோ; கள்ள மாயையால் -
(ஆகவே அவன்) திருட்டு மாயச் செயலால்; வஞ்சனை இழைத்தனன் -
(இத்தகு) வஞ்சனைச் செயலைச் செய்து உள்ளான்.

     இராமன் திருமாலவதாரம் ஆதலால் அவனை எதிர்த்து நின்று
வென்று சீதையை எடுத்துக் கொண்டு வந்திருக்க முடியாது. கள்ள
மாயையால் தான் அவன் சீதையைக் கவர்ந்து வந்திருக்க வேண்டும் எனச்
சடாயு எண்ணினான் என்க. இப்பாடல் சடாயுவின் நுண்ணறிவுத்
திறத்தையும், இதுதான் நடந்திருக்க முடியும் என்று உய்த்துணரும்
திறமையையும் வாழ்வு அனுபவத்தின் கனிவையும் காட்டி நிற்றல் உணர்ந்து
மகிழும்படி அமைந்துள்ளது.                                    55