வரவேற்றான்; ஆனவன் - அப்படி வந்த இராமனும்; அடி தொழ - முனிவனின்அடிவணங்க; அருள் வர அழுதான் - அன்பு பெருகக் கண்ணீர் சிந்தினான்; தானுடை இடவகைதழுவினன் நுழை வான் - தானிருக்கும் குடிலிடத்து இராமனைத் தழுவிக் கொண்டு உட்புகுவார். புலமை - அறிவு, ஞானம். அருள் - இலக்கணையாய் அன்பிற்காயிற்று இட வகை - இருப்பிடம்,வீடு தானுடை இடவகை தழுவினன் நுழைவான் என்பதற்குத் தன்னடியார் இருப்பிடமே தன் வைகுந்தம் எனக்கருதும் இராமன் நுழைந்தான் என்பர். அழுகை உவகைக் கலுழ்ச்சி. 33 2620. | 'ஏழையும் இளவலும் வருக' என, இனிதா வாழிய அவரொடும் வள்ளலும் மகிழ்வதால், ஊழியின் முதல்முனி உறையுளை அணுக, ஆழியில் அறிதுயிலவன் என மகிழ்வான். |
(சரபங்கர் இராமனை நோக்கி) ஏழையும் இளவலும் வருக என - சீதையும் இலக்குவனும் வருகஎன்று வரவேற்க; இனிதா வாழிய அவரொடும் வள்ளலும் மகிழ்வால் - நன்றாக,வாழ்விற்குரிய அவர்களொடு இராமனும் மகிழ்ச்சியால்; ஊழியின் முதல் முனி உறையுளை அணுக -பிரளய காலத்திற்கு முன்னம் இருந்த சரபங்கரின் வாழுமிடத்தைச் சேர; ஆழியில்அறிதுயிலவன் என மகிழ்வான் - திருப்பாற் கடலில் யோக நித்திரை கொள்ளும் திருமால்இவனே என்று தெளிந்து சரபங்க முனிவர் களிப்பெய்தினார். ஏழை - பெண்ணாம் சீதையைக் குறித்தது. இக்காண்டத்தில் 'மழைக் கண் ஏழை' என வருவதும்காண்க (3316), சரபங்கர் இராமனைப் பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் திருமால் என எண்ணிக்களித்தார். வாழிய என்பது அசை நிலையுமாம். 34 2621. | அவ் வயின், அழகனும் வைகினன்- அறிஞன் செவ்விய அற உரை செவிவயின் உதவ, நவ்வியின் விழியவளொடு, நனி இருளைக் கவ்விய நிசி ஒரு கடையுறும் அளவின். |
|