பக்கம் எண் :

அகத்தியப் படலம் 65

    அவ்வயின் - அவ்விடத்தில், அறிஞன் செவ்விய அறஉரை செவி
வயின் உதவ -
சரபங்கர் நல்ல அறமொழிகளைக் காதிலே கூற(க் கேட்டு);
அழகனும் நவ்வியின்விழியவளொடு - இராமனும் பெண்மானின் விழி
போன்ற கண்களையுடைய சீதையோடு; நனிஇருளைக் கவ்விய நிசி ஒரு
கடையுறும் அளவின் வைகினன் -
இருட்டை மிகுதியும் பற்றிய இரவுப்
பொழுது ஒரு முடிவை அடையும் அளவு தங்கினான்.

     இரவு முழுவதும் அறவுரை கேட்டுக் கொண்டிருந்தனர் என்றும் கூறுவர்.
இராமனை அழகன் எனக்குறிப்பதை அழகனும் அவளும் துஞ்ச '(2344)
அதிகம் நின்று ஒளிரும் இவ் அழகன் முகம் (2748)என்ற தொடர்களில்
காணலாம். சீதையைக் கூறியது இலக்குவனுக்குஉபலட்சணம்.           35

2622.விலகிடு நிழலினன், வெயில்
     விரி அயில் வாள்
இலகிடு சுடரவன், இசையன
     திசை தோய்,
அலகிடல் அரிய, தன் அவிர்
     கர நிரையால்,
உலகு இடு நிறை இருள் உறையினை
     உரிவான்.

    விலகிடு நிழலினன் - வீசுகின்ற ஒளியுடையவனும்; இலகிடு
சுடரவன் -
விளங்குகின்ற சுடர் உடையவனும் ஆன சூரியன்;இசையன
திசை தோய் -
தன்புகழ் போல் நான்கு திசைகளிலும் சென்று படிந்த;
அலகிடல்அரிய - கணக்கிட்டுக் கூற முடியாத; வெயில் விரி அயில்
வாள் -
வெயில் விரிந்தகூரிய வாள்கள் போன்ற; தன் அவிர்கர
நிரையால் -
தன்னுடைய விளங்கும் கதிர்களாம்கைகளின் கூட்டத்தால்;
உலகு இடு நிறை இருள் உறையினை உரிவான் - உலகங்களை மூடிய
நிறைந்த இருட்டாகிய போர்வையைக் கழற்றுவான்.

     நிழல் இனன் எனப் பிரித்து ஒளியுடைய சூரியன் எனலுமாம். சூரியன்
தன் கதிர்களால் இருள்நீங்கத் தோன்றியதை உருவகமாக்கியுள்ளார். உலகை
மூடிய இருளைப் போக்குவது வெயில், அதனைப்பரப்புதற்குக் கதிர்
ஆகியவற்றை முறையே உறையும் வாளும் கையுமாகப் படைத்துள்ளார்.
இசையனஎன்பதற்கு ஒன்றோடொன்று இணங்கி நிற்பன எனவும் உரைப்பர்.
கரம் - சிலேடைஉருவகம்.                                      36

சரபங்கர் தீப் புக்கு வீடு பெறல்

2623.ஆயிடை, அறிஞனும், அவன்
எதிர் அழுவத்
தீயிடை நுழைவது ஓர்
தெளிவினை உடையான்,