பக்கம் எண் :

66ஆரணிய காண்டம்

 'நீ விடை தருக' என
     நிறுவினன், நெறியால்,
காய் எரி வரன் முறை
     கடிதினில் இடுவான்.

    ஆயிடை - அப்பொழுது; அறிஞனும் அவன் எதிர் - சரபங்க
முனிவரும் இராமன் எதிரில்; அழுவத்தீயிடை நுழைவது ஓர் தெளிவினை
உடையான் -
மிகுந்த நெருப்பில் புகுந்து உயிர் விடுவதான ஒருதெளிந்த
அறிவினை மேற்கொண்டவராய்; காய் எரி வரன் முறை நெறியால்
கடிதினில் இடுவான் -
எரியும் தீயை சாத்திர முறைப்படி விரைவில்
வளர்ப்பார் ஆகி; நீ விடை தருக எனநிறுவினன் - நீ எனக்கு விடை
தருவாயாக எனக் கேட்டார்.

     அழுவத்தீ அங்கிருந்த காட்டுத் தீ எனலுமாம் பரந்த ஒமகுண்டத்திலே
என்பாருமுளர். இடுவான்என்பதை எச்சமாக்கி இடுவதற்கு விடை தருக
எனவும் கூறலாம்.                                             37

2624.வரி சிலை உழவனும், மறை
     உழவனை, 'நீ
புரி தொழில் எனை? அது
     புகலுதி' எனலும்,
'திருமகள் தலைவ! செய் திருவினை
     உற, யான்
எரி புக நினைகுவென்; அருள்'
     என, இறைவன்:

    வரிசிலை உழவனும் -கட்டமைந்த வில்லில் வல்ல இராமனும்; மறை
உழவனை -
வேதம் வல்ல சரபங்கரை நோக்கி;நீபுரி தொழில் எனை
அது புகலுதி எனலும் -
நீ செய்ய விரும்பிய செய்கை என்ன? அதனைக்
கூறுவாயாக எனக் கேட்டதும்; திருமகள் தலைவ செய் திருவினை உற -
இலக்குமி கணவனே,செம்மையான மோட்சத்தை அடையும்படி; யான் எரிபுக
நினைகுவென் அருள் என -
நான் தீயில்புக எண்ணினேன், நீ விடை
அருள்க என்று வேண்டவும்; இறைவன் - இராமன்.

     சிலை உழவன், மறை உழவன் என்பன முன்னர் வாளுழவன் என்ற
தொடர் (1371) வந்ததுபோன்றது. குறளில் வில்லேர் உழவர், சொல்லேர்
உழவர் என்பவையும் காண்க. (குறள் 872).செய் இருவினை எனப் பிரித்து
முன் செய்த நல்வினை தீவினை எனவும் கூறுவர். அவை அறின்மோட்சம்
கிடைக்கும் என்பதாம்.                                          38

2625. 'யான் வரும் அமைதியின் இது
     செயல் எவனோ?-