பக்கம் எண் :

சடாயு உயிர் நீத்த படலம் 661

இலக்குவனைப் பார்த்து, 'இறந்த தந்தையாகிய சடாயுவுக்கு உரிய ஈமச்
சடங்குகளைக் குறைவறச் செய்வோம்' என்றான். உரிமை - கடன்கள்,
சடங்குகள்.                                                133

3536. இந்தனம் எனைய என்ன கார்
     அகில் ஈட்டத்தோடும்
சந்தனம் குவித்து, வேண்டும்
     தருப்பையும் திருத்தி, பூவும்
சிந்தினன்; மணலின் வேதி
     தீது அற இயற்றி, தெண் நீர்
தந்தனன்; தாதை தன்னைத் தடக்
     கையான் எடுத்துச் சார்வான்,

    எனைய - எத்தன்மை உடைய; இந்தனம் என்ன - விறகுகள் என்று
கண்டவர் வியக்கும் படி; கார் அகில் ஈட்டத் தோடும் - கரிய அகில்
கட்டைகளின் தொகுதியுடன்; சந்தனம் குவித்து - சந்தனக் கட்டைகளையும்
சேர்த்துக் குவித்து; வேண்டும் தருப்பையும் திருத்தி - தேவையான
தருப்பைப் புற்களையும் திருத்தமாக அமைத்து; பூவும் சிந்தினன் -
பூக்களையும் கொண்டு வந்து (சடாயுவின் மீது) தூவினான்; மணலின் வேதி
தீது அற இயற்றி -
(வேத முறைப்படி) மணலினால் மேடையைக் குற்றம்
இல்லாமல் அமைத்து; தெண் நீர் தந்தனன் - தெளிந்த நீரினையும்
கொண்டு வந்து சேர்த்து; தாதை தன்னை - (தன்) தந்தையாகிய சடாயு
தன்னை; தடக்கையான் எடுத்து - பெரிய கைகளால் எடுத்துக் கொண்டு;
சார்வான் - இறுதிச் சடங்கு செய்யப்படுதற்கு உரிய மணல் வேதிகைக்குச்
சென்று சேர்ந்தான்.

     இறுதிச் சடங்கு செய்தற்குரிய விறகு, தருப்பை, பூ, தண்ணீர்
ஆகியவற்றைச் சேர்த்து வைத்து, அதற்காக மணல் மேடை அமைத்ததையும்
இப்பாடல் விளக்குகிறது. இத்தனம் - விறகு, கார் - கரிய; மணலின் வேதி -
மணல் மேடை,                                              134

3537. ஏந்தினன் இரு கைதன்னால்;
     ஏற்றினன் ஈமம்தன்மேல்;
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன்;
     தலையின் சாரல்
காந்து எரி கஞல மூட்டி, கடன்
     முறை கடவாவண்ணம்
நேர்ந்தனன்-நிரம்பும் நல் நூல் மந்திர
     நெறியின் வல்லான்.

    நிரம்பும் நல்நூல் மந்திர நெறியின் வல்லான் - நிறைந்த நல்ல
நூல்களாகிய சாத்திரங்களின் முறையில் வல்லவனாகிய இராமன்; நீரும்
சாந்தொடு மலரும் சொரிந்தனன் -
நீரையும் சந்தனத்தையும் மலரையும்