கதிக்குத் தேவையான (சடங்குகளை) எல்லாம் செய்பவன் போல; வேலை சார்ந்தான் - கடலில் (சென்று) மறைந்தான். இராமன் நீத்தார் கடன்களை முறையாகச் செய்து முடித்த வேளையில், கதிரவன் அவனது துன்பத்தைக் கண்டு பொறுக்காது தானும் புனலாடிச் சடங்கு செய்பவன் போல் கடலில் சென்று மறைந்தான் என்பதாம். தொல்வகைக் குலத்தின் வந்தான் என்பது சடாயுவைக் குறிக்கும் என்பாருமுளர். 138 |