பக்கம் எண் :

அயோமுகிப் படலம் 667

சுழற்சி அடைபவைபோல; தேன் உக அருவி சிந்தி - தேனினையும்
அருவி நீரினையும் ஒழுக விடுவதால்; கண்ணின் நீர் உகுக்கும் - (அவை)
கண்ணீர் வெளிப்படுவது போல் வெளிப்படும்; கங்குல் - அன்று இரவிலே;
மானமும் - (சீதையை இராவணன் கவர்ந்து சென்றதால் ஏற்பட்ட)
அவமானமும்; சினமும் - அந்த (இராவணன் மீது தோன்றிய) சினமும்;
தாதை மரணமும் - தந்தையாகிய சடாயுவின் மரணத்தால் (ஏற்பட்ட மனத்
துயரமும்); ஞானமும் - நல்லறிவும்; துயரமும் - துன்பமும்; தம்முள்
மலைந்தென -
தங்களுக்குள் (முரண்பட்டுப்) போரிட்டது போல; மைந்தர்
சிந்தை -
வலிமையுடைய இராமலக்குவர்களுடைய மனத்தில்; நலிந்த -
தாக்கி வருத்தின.

     காடும் மலையும் இராமலக்குவர் துன்பத்துக்கு வருந்துபவை போல்
தேனையும் அருவி நீரையும் சொரிந்தன. அவர்களுடைய மனத்தில்
அவமானமும், சினமும், துயரமும் மோதியது. நல்லறிவும் துன்பமும் தம்முள்
மாறுபட்டுப் போர் புரிவதைப் போல் அவர்களை வருத்தின. தெருமரல் -
மனச் சுழற்சி, "அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி" என்பர்
தொல்காப்பியனார் (தொல் சொல் உரி 13) கங்குல் - இரவு, மானம் -
அவமானம், ஞானம் - தூய அறிவு, அன்று, ஏ - அசைகள்            2

3543.மெய் உற உணர்வு செல்லா
     அறிவினை வினையின் ஊக்கும்
பொய் உறு பிறவிபோல, போக்க
     அரும் பொங்கு கங்குல்,
நெய் உறு நெருப்பின் வீங்கி
     நிமிர்தர, உயிர்ப்பு நீள,
கையறவு உறுகின்றாரால்; காணல்
     ஆம் கரையிற்று அன்றே.

    மெய் உற உணர்வு செல்லா - தத்துவ ஞானத்தின் கண் உணர்வு
பொருந்தியமையாத; அறிவினை - அறிவை; வினையின் ஊக்கும் -
தீவினையின் கண் செலுத்துகிற; பொய் உறு பிறவிபோல - பொய்மைத்
தன்மை மிக்க பிறப்புப் போல; போக்க அரும் பொங்கு கங்குல் - நீக்க
முடியாது மென் மேல் வளருகிற (அந்த) இராக்காலத்தின் கண்; உயிர்ப்பு -
பெருமூச்சு; நெய் உறு நெருப்பின் வீங்கி நிமிர்தர - நெய் சொரியப்
பெற்ற நெருப்பைப் போல மிக ஓங்கி நிற்க; நீள கை அறவு உறுகின்றார்
-
நீண்ட செயலறுதலை அடைகின்றார்கள்; காணல் ஆம் கரையிற்று
அன்றே -
(அந்நிலை நம்மால்) காணத்தகுந்த எல்லையுடையது அன்று.

     தத்துவஞானமுடையவரன்றிப் பிறரால் நீக்க முடியாத பிறவி போல,
மன உறுதி இல்லாமையால் இராமலக்குவரின் துன்பம் நீக்க முடியாது
உள்ளது என்றவாறு. பிறவியை இருளாகக் கூறும் கவி மரபை எண்ணுக.
காணல் ஆம் கரையிற்று என்பதை இரவுக்கு இணைத்துத் துன்பத்தால்