கூறப்படுகிற; கோள் அராத்தவழும் சாரல் - குறிதவறாமல் கொள்ளும் தன்மை உள்ள பாம்பு ஊர்கிற பக்க மலையில்; விண்தலம் விளக்கும் - ஆகாயத்தின் இடத்தைத் தன் (ஒளியால்) விளங்கச் செய்யக்கூடிய; செவ்வி- அழகுடைய; வெண் மதி விரிந்தது - வெண்மையான நிலவு கதிர் வீசிப் பரவியது. சீதையைக் காணாது வருந்திய இராமன் அவளது திருமுகம் கண்டேன் என்று ஆசை கொள்ளுமாறு சந்திரன் உதித்தான் என்றார். பிரிவின் கண் பெரும் பிழை தருவது தென்றல் ஆகலின் அதனைக் கோளரவாக உருவகித்தார். தண் தமிழ்த் தென்றல் - குளிர்ந்த இனிமை உடைய தென்றல், தமிழ் போல் இனிய தென்றல், தமிழ் நாட்டு இனிய தென்றல் என்று பலவாறு பொருள் தரும். தமிழ் - இனிமை என்னும் பொருளும் தரும், தண் தமிழ்த் தென்றல் - கம்பரின் மொழிப் பற்றைத் தெளிவுறக் காட்டும் சான்றாகும். அகத்தியப் படலத்தில் "தழற் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ்", 3, 3, 41" "என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்" (2671) என்று வந்துள்ள வரிகள் கம்பர் பெருமானின் தமிழ்ப் பற்றை விளக்குவனவாகும் என்பதையும் எண்ணுக. உளர்தல் - ஒலித்தல், வாள் - ஒளி, சாரல் - பக்க மலை. கோள் - முதல் நிலை நீண்ட தொழிற் பெயர், அன்றே - ஈற்றசை. 6 3547. | களியுடை அனங்கக் கள்வன் கரந்து உறை கங்குற்காலம் வெளிபடுத்து, உலகம் எங்கும் விளங்கிய நிலவின் வெள்ளம் - நளி இருள் பிழம்பு என்று, ஈண்டு, நஞ்சொடு கலந்த நாகத் துளை எயிற்று ஊறல் உற்றதாம் என - சுட்டது அன்றே. |
களியுடை அனங்கக் கள்வன் - மனச் செருக்குடைய உருவிலியாகிய மன்மதக் கள்ளன்; கரந்துறை கங்குற் காலம் - மறைந்து வாழுகிற இரவுக்காலத்தில்; உலகம் எங்கும் - உலகம் முழுவதிலும்; வெளிபடுத்து விளங்கிய - வெளிப்பட்டு விளங்கிய; நிலவின் வெள்ளம் - நிலவினது மிக்க ஒளி; நளி இருள் பிழம்பு என்று - செறிந்த இருள் கூட்டம் என்னும்படி; ஈண்டு நஞ்சொடு கலந்த நாக - மிகுந்து நெருங்கிய நஞ்சு சேர்ந்த நாகப் பாம்பினது; துளை எயிற்று ஊறல் - உள் துளை உடைய பல்லில் ஊறுகிற நஞ்சு; ஊற்றதாம் எனச் சுட்டது - பொருந்தியது என்னும்படி, (இராமனை) மிகுதியும் வருத்தியது. மன்மதன் செருக்குடன் மறைந்து வாழுகிற இரவுக் காலத்தில் தோன்றிய நிலவு ஒளி இராமனை நாகத் துளை எயிற்றில் இருந்து வெளிப்பட்ட நஞ்சு போல் சுட்டது என்பதாம். இருட்பிழம்பு - நஞ்சுள்ள |