பக்கம் எண் :

678ஆரணிய காண்டம்

இதனால் இறைவன் காலங்கடந்தவன் என்பதை விளங்கினார். 'காலமும்
கணக்கும் நீத்த காரணன்' (5884) என்றார் பிறாண்டும், அரோ - அசை.  18

3559.'வென்றி விற் கை
     இளவலை! மேல் எலாம்
ஒன்று போல உலப்பு
     இல நாள்கள்தாம்
நின்று காண்டி அன்றே?
     நெடுங் கங்குல்தான்
இன்று நீள்வதற்கு
     ஏது என்?' என்னுமால்.

    வென்றி விற்கை இளவலை - வெற்றிக்கு உரிய வில்லைக் கையில்
பிடித்த இளையவனாகிய இலக்குவனை (இராமன் பார்த்து); ஒன்று போல
உலப்பு இல நாள்கள் -
ஒரே மாதிரியாக இயல்பு கெடாது கழிந்த
நாள்களை; மேல் எலாம் - முன்பு எல்லாம்; நின்று காண்டி அன்றே -
(என்னோடு சேர்ந்து) இருந்து கண்டுள்ளாய் அல்லவா?; நெடுங் கங்குல்
இன்று நீள்வதற்கு ஏது என்? -
நீண்ட இரவுப் பொழுது இன்று மட்டும்
நீண்டிருப்பதாய்த் தோன்றுவதற்குக் காரணம் என்ன?; என்னும் - என்று
கேட்கும்.

     'என்னுடன் உடனிருந்து கழித்த நாட்களில் நீ கண்டுள்ள இரவை விட
இன்று மட்டும் இரவு நீள யாது காரணம்?' என்று இராமன் இலக்குவனை
வினவினான் என்க. நின்று - இரவு முழுதும் விழித்து நின்று. எலாம் -
இடைக்குறை, தாம், தான், ஆல் - அசைகள்.                       19

3560. நீண்ட மாலை
     மதியினை, 'நித்தமும்
மீண்டு மீண்டு
     மெலிந்தனை, வெள்குவாய்;
பூண்ட பூணவள்
     வாள்முகம் போதலால்,
ஈண்டு, சால
     விளங்கினை' என்னுமால்.

    நீண்ட மாலை மதியினை - (பிரிந்தவர்க்கு) நீண்டதாகத் தோன்றி
அமையும் மாலைக் காலத்து அம்புலியை (இராமன் பார்த்து); 'நித்தமும்
மீண்டு மீண்டு மெலிந்தனை வெள்குவாய் -
(சீதை என்னுடன் இருக்கும்
போது) நாள்தோறும் (அவள் முகத்துக்கு ஒப்பு என்ற நினைவுடன்)
திரும்பத் திரும்ப வந்து (அவ்வாறு ஒப்பாக மாட்டாமையால்) உடல்
மெலிந்தவனாகி வெட்கம் கொண்ட (நீ); பூண்ட பூணவள் வாள் முகம்
போதலால் -