பக்கம் எண் :

680ஆரணிய காண்டம்

"வாள் அரக்கன் - வாளை ஏந்திய அரக்கனாகிய இராவணன்; முட்டு
அமைந்த நெடு முடக் கோனோடு -
கடிவாளத்தைக் கையில் கொண்ட
பெரிய அருணனோடு; கதிரோனையும் - கதிரவனையும்; கட்டி - (தன்
ஆற்றலால்) கட்டி; இருஞ் சிறை இட்டனன் கொல் - பெரிய சிறையில்
அடைத்திட்டானோ?; என்னும் - என்று (இராமன்) எண்ணினான்.

     இரவு நீள்தற்கு உரிய காரணம் என்ன என்று மேலும் எண்ணிய
இராமன் ஒரு வேளை இராவணன் கதிரவனை அவனுடைய தேர்ப் பாகன்
ஆகிய அருணனுடன் ஒரு சேரக் கட்டிச் சிறையில் இட்டுவிட்டானோ
என்றான். முட்டு - கடிவாளம். முடக்கோன் - அருணன்; இவன் தொடை
இல்லாதவன் ஆகவே இவ்வாறு கூறப்பட்டது. சுட்ட - செய்த எனும்
வாய்பாட்டுப் பெயரெச்சம். சோர்கின்றான் - வினையாலணையும் பெயர்.
ஆல் - அசை.                                             22

3563.'துடியின் நேர் இடை
     தோன்றலளாம்எனின்,
கடிய கார் இருள்
     கங்குலின் கற்பம் போய்
முடியும்ஆகின், முடியும்,
     இம் மூரி நீர்
நெடிய மா நிலம்'
     என்ன, நினைக்குமால்.

    துடியின் நேர் இடை - உடுக்கையை ஒத்த இடையை உடைய சீதை;
தோன்றலளாம் எனின் - (இரவு விடிவதற்குள்) என் முன் தோன்றாமல்
போனாள் எனின்; கடிய கார் இருள் கங்குலின் - (அந்நிலையிலேயே
இந்தக்) கொடிய கரிய இருளை உடைய இரவாகிய; கற்பம் போய் முடியும்
ஆகின் -
நீண்ட காலம் முடிந்து (விடியல் வரும்) என்றால்; இம்மூரிநீர்
நெடிய மாநிலம் -
இந்த வலிய கடலால் சூழப்பட்ட மிகப் பெரிய உலகம்;
முடியும் - (என் ஆற்றலால்) அழிந்து விடும்; என்ன நினைக்கும் - என்று
(இராமன்) எண்ணுவான். ஆல் - ஈற்றசை.

     சீதை இந்த நீண்ட கங்குற் கற்பம் முடிவதற்குள் வராமல் போய்
விடிவு வந்தால் இவ்வுலகத்தை அழித்து விடுவேன் என்று கூறி இராமன்
சினம் கொண்டனன் என்க. துடி - உடுக்கை, கற்பம் - நீண்ட காலம்,
கற்பாந்த காலம் என்ப. மூரி - வலிமை. மூரி நீர் - கடல், நேர் - உவமை
உருபு; நேர நேர் என வந்தது. மூரி நீர் - பண்புத் தொகைப் புறத்துப்
பிறந்த அன்மொழித்தொகை,                                    23

3564.'திறத்து இனாதன, செய்
     தவத்தோர் உற
ஒறுத்து, ஞாலத்து உயிர்தமை
     உண்டு, உழல்