பக்கம் எண் :

அகத்தியப் படலம் 69

அவளொடு - தம் மனைவியோடும்; கதழ் எரி முழுகி போதலை
மருவினன் -
பற்றி எரியும் பெரியநெருப்பில் புகுந்து பரமபதம் சேர்ந்தான்.

     மிகு பொருள் - பரம்பொருளாகிய இராமன் எனலுமாம். கதழ் - மிகுதி,
வலிமை. உரையா -செய்யா எனும் வாய்பாட்டு எச்சம்.               42

2629. தேவரும், முனிவரும், உறுவது
     தெரிவோர்,
மா வரும் நறு விரை மலர்
     அயன் முதலோர்,
ஏவரும், அறிவினில் இரு
     வினை ஒருவி,
போவது கருதும் அவ் அரு
     நெறி புக்கான்.

    உறுவது தெரிவோர் -இனி நடப்பதைத் தம் அறிவால் தெரிந்து
கொள்ளக் கூறியவர் ஆன; மாவரும் நறுவிரை மலர்அயன் - பெருமை
மிக்க நல்ல தெய்வ மணமுள்ள தாமரை மலர் மீது அமர்ந்த பிரம தேவனும்;
தேவரும் - தேவர்களும், முனிவரும் முதலோர் - முனிவரும்
முதலானோர்; ஏவரும் -மற்றை எல்லோரும்; இருவினை அறிவினில்
ஒருவி -
நல்வினை தீவினை ஆகியஇரண்டையும் ஞானத்தால் அறிந்து
நீக்கி; போவது கருதும் - கடைசியாக அடைய எண்ணும்; அவ் அருநெறி
புக்கான் -
பெறற்கரிய அந்தப் பரமபதத்தைச் சேர்ந்தார்.

     உறுவது தெரிவோர் என்பது எதிர் காலத்தைக் குறித்தது. இறப்பு,
நிகழ்வு ஆகிய இருகாலத்தைஅறிவதை விட எதிர்காலத்தை அறிதலே
கடினம். உபலட்சணத்தால் மற்ற இரு காலத்தையும் குறிப்பால்உணர்த்தல்
கொண்டு முக்கால ஞானியர் எனலாம். மலரயன் தேவர் முதலோர்
இருவினைப் பயனால்அடையும் நிலை பெற்றவர் என்பதாம். தம்
வினைப்பயனை இராமன் திருவடியில் இட்டுச் சரபங்கர்பரமபதம்
அடைந்தார் என்பர்.                                            43

2630.அண்டமும் அகிலமும்அறிவு
     அரு நெறியால்
உண்டவன் ஒரு பெயர்
     உணர்குநர் உறு பேறு
எண் தவ நெடிது எனின்
     இறுதியில் அவனைக்
கண்டவர் உறு பொருள் கருதுவது
     எளிதோ?