(விராதன் வருகையினால்); புக்க வாள் அரி - புகுந்த ஒளியுடைய சிங்கங்கள்; முழங்கு - முழக்கு; செவியின் பொறிஉற - காதுகளில் பொருந்த; பக்கம் மின்னும்- எல்லாப் பக்கங்களிலும் ஒளி வீசும்; மணிமேருசிகரம் - இரத்தினம் பொருந்தியமேருமலையின் முகடு; குழைபட - குளிர்ந்து கெட, எதிர் உற்ற செருவத்து - எதிர்ப்பட்ட போரில்; உக்க வீரர் உதிரத்தின் - வீழ்ந்த வீரரின் இரத்தத்தால்; செக்கர் வான்மழை நிகர்க்க - செவ்வான மேகம் போல; ஒளிர் செச்சையினொடு- விளங்கும் செஞ்சந்தனப் பூச்சுடனே; ஏ - அசை. சிங்கங்களின் செவியின் பொறி புக்கு உக என்றும் கூறுவர், விராதன் செவி மலைக்குகைபோல் இருந்தன என்பதாம். அவனுடைய கரிய தோளில் பூசிய சிவந்த இரத்தப் பூச்சு செவ்வானமேகம் போன்றது. 8 | 2525. | படையொடு ஆடவர்கள், பாய் புரவி, மால் களிறு, தேர், நடைய வாள் அரிகள், கோள் உழுவை, நண்ணியஎலாம் அடைய வாரி, அரவால் முடி, அனேக வித, வன் தொடையல் மாலை துயல்வந்து உலவு தோள் பொலியவே. |
படையொடு ஆடவர்கள் - போர்க் கருவி ஏந்திய வீரர்கள்; பாய் புரவி - தாவிப்பாயும் குதிரைகள்; மால்களிறு - பெரிய மத யானைகள், தேர் - தேர்கள்;நடைய - உலாவும்; வாள் அரிகள் - ஒளியுடைய சிங்கங்கள்; கோள் உழுவை -உயிரைக் கொள்வதைத் தொழிலாகக் கொண்ட புலிகள்; நண்ணிய எலாம் - இவ்வாறுதன்னை அடைந்த யாவற்றையும்; அடைய வாரி - முழுவதும் வாரிக் கொண்டு வந்து, அரவால் முடி - பெரிய பாம்பால் தொகுத்துக்கட்டிய; அனேக வித வன் தொடையல் மாலை - பலவிதமான, வலிதாகத் தொடுக்கப்பட்ட மாலைகள்; துயல்வந்து - தொங்கி அசையும், உலவு தோள் - விசாலமான தோள்கள்; பொலிய - விளங்க, ஏ - அசை. ‘படையொடு... தேர்’ என நாற்படையும் வந்தன. வாரி என்றதால் எளிமையாக அள்ளி எடுத்தமைபுலனாம் 9 | 2526. | குன்று துன்றின எனக் குமுறு கோப மதமா ஒன்றின் ஒன்று இடை அடுக்கின தடக் கை உதவ, பின்றுகின்ற பிலனின் பெரிய வாயின்ஒரு பால் |
|