பக்கம் எண் :

70ஆரணிய காண்டம்

    அண்டமும் அகிலமும் அறிவு அரு நெறியால் - எல்லா
அண்டங்களையும் உலகங்களையும்யாரும் அறியாதபடி; உண்டவன்
ஒருபெயர் உணர்குநர் உறுபேறு -
எடுத்துண்ட திருமாலாம்இராமனின்
ஒப்பற்ற நாமத்தைச் சிந்திப்பவர் அடையும் சிறப்பு; எண்தவ நெடிது
எனின் -
கணக்குக்கு எட்டாத பெரிது ஆகும் என்றால்; இறுதியில்
அவனைக் கண்டவர் -
முடிவில்அப்பரம் பொருள் ஆனவனைக்
கண்டவர்; உறு பொருள் கருதுவது எளிதோ - அடையும் சிறந்த
பொருளை நினைப்பது எளியதோ? (ஆகாது).

     அண்டமும் அகிலமும் உண்டவன் - யுகமுடிவில் எல்லாவற்றையும்
திருமால் தன்னுள் அடக்குவதைக்குறிக்கும். ஒரு - ஒப்பற்ற. எண் -
நினைப்பும் ஆம். பேறு - பெறும் பதவி. உறு - மிகுதிகுறிக்கும் உரிச்சொல்.
தவநெடிது என்பதையும் உரிச்சொற்றொடராகக் கொள்வர் சிலர். இது
தொடர்நிலைச் செய்யுள் பொருட்பேறணி.                          44