தள்ளா வினையேன் - நீக்க முடியாத வினையை உடையவனாகிய எனது; தனி ஆர் உயிர் ஆய் உள்ளாய் - ஒப்பில்லாத அருமையான உயிராக உள்ளவனாகிய; ஒரு நீயும் - ஒப்பற்றவனாகிய நீயும்; ஒளித்தனையோ - (என்னை விட்டுப் பிரிந்து) மறைந்து விட்டாயோ?; பிள்ளாய் - என் பிள்ளை போல் இளையவனே; பெரியாய் - அறிவில் பெரியவனே; பிழைசெய்தனை- (என்னைக் காரிருளில் கானகத்தே விட்டுச் சென்று) தவறு செய்து விட்டாய்; இதோ கொடிதே - இச்செயல் மிகக் கொடுமையானதேயாகும்; உன்னை உலகு கொள்ளாது - உனது செயலை உலகத்தில் உள்ள பெரியவர்கள் ஏற்க மாட்டார்கள். ஆல் - அசை. வினைப்படுபவனாகிய எனது ஒப்பற்ற தம்பியாகிய நீயும்என்னைப் பிரிந்து விட்டாய். உனது இச்செயலைப் பெரியவர்கள் ஏற்கமாட்டார்கள் என்று இராமன் நொந்து கூறினான். வினையேன் -குறிப்பு வினையாலணையும் பெயர் நீயும் - எம்மை இறந்தது தழீ இயஎச்ச உம்மை; முன்பே பிரிந்து விட்ட சீதையையும் நினைவுபடுத்துவதுஇவ்வும்மை. உலகு - இடவாகுபெயர். 68 3609. | 'பேரா இடர் வந்தன பேர்க்க வலாய்! தீரா இடர் தந்தனை: தெவ்வர் தொழும் வீரா! எனை இங்ஙன் வெறுத்தனையோ? வாராய், புறம் இத்துணை வைகுதியோ? |
வந்தன பேரா இடர் - வந்தனவாகிய நீக்க முடியாத துன்பங்களை; பேர்க்க வலாய் - நீக்க வல்லவனே!; தீரா இடர் தந்தனை - (என்னை விட்டுப் பிரிந்து எனக்கு) நீக்க முடியாத துன்பத்தைத் தந்து விட்டாய்; தெவ்வர் தொழும் வீரா - பகை வரும் தொழுகின்ற (வலி படைத்து) வீரனே!; எனை இங்ஙன் வெறுத்தனையோ - என்னை இவ்வாறு வெறுத்து விட்டாயோ?; வாராய் - (இங்கு) வராமல்; புறம் - (என்னைத் தனியே விட்டு) வெளியில்; இத்துணை வைகுதியோ - இவ்வளவு காலம் தங்கி இருந்தாயோ? 'எனக்கு ஏற்படும் பெருந் துன்பத்தைப் போக்க வல்லவனாகியநீ காட்டில் என்னைத் தனியே விட்டுப் பிரிந்து சென்று எனக்குநீங்காத துன்பத்தை உண்டாக்கிவிட்டாய்; இவ்வளவு நேரம் வராமல்தங்கியிருப்பது உனக்குச் சரியோ' என்றவாறு. தெவ்வர் - பகைவர்.புறம் - வெளியில். பேரா, தீரா - ஈறுகெட்ட எதிர் மறைப்பெயரெச்சங்கள். வந்தன - முற்றெச்சம். 69 3610. | 'என்னைத் தரும் எந்தையை, என்னையரை, |
|