பக்கம் எண் :

718ஆரணிய காண்டம்

மேவ அரும் பகை எனக்கு
     ஆக மேல்வரின்,
ஏவரே கடப்பவர்?
     எம்பி! நீ உளை
ஆவதே வலி; இனி,
     அரணும் வேண்டுமோ?

    மூவகை அமரரும் - (படைத்தல், காத்தல், அழித்தல்) என்ற
முத்தொழிலைச் செய்கின்ற தேவர்களான (பிரமன், விஷ்ணு, சிவன்)
ஆகியவர்களும்; மும்மை உலகமும் - (மேல், கீழ், நடு என்று)
மூன்று வகையான உலகத்தில் வாழ்பவர்களும்; மேவ அரும் பகை
எனக்கு ஆக மேல்வரின் -
நெருங்கிக் கடத்தற்கரிய பகைவர்களாகி
என்னை எதிர்த்து வந்தாலும்; ஏவரே கடப்பவர்? - (என்னை)
வஞ்சியாமல் எதிர் நின்று வெல்ல வல்லவர் யாவர்?; எம்பி - என்
தம்பியே; நீயுளை ஆவதே வலி - நீ என்பக்கலில் இருப்பதே
(எனக்கு) வலிமை; இனி - இனிமேல்; அரணும் வேண்டுமோ - (நீ
யன்றி) (எனக்கு) வேறு ஒரு காவலும் வேண்டுமோ?

     மூவரும் மூவகை உலகத்தவரும் எதிர்த்து வரினும் நீ எனக்கு
வலிமையாகவும், அரணாகவும் இருக்கிறபடியால் என்னை எவராலும்
வெல்ல முடியாது என்றவாறு. "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்"
என்ற பழமொழியையும் ஈண்டு நினைவில் கொள்க. இந்திரசித்தின்
தலையை இராமன் திருவடிகளில் வைத்து இலக்குவன் வணங்கிய
போது, 'தம்பி உடையான் பகை அஞ்சான் என்னும் மாற்றம்
தந்தனையால் (9183) என்று இராமபிரான் கூறுவது இங்கு
நினையத்தக்கது. மூவகை அமரர் - முத்தொழில் இயற்றும் பிரமன்,
திருமால், சிவன் ஆகியோர். மூவுலகு - விண்ணுலகு, மண்ணுலகு,
பாதாள உலகு என்பவையாகும். மேவுதல் - நெருங்குதல். ஏவர் -
யாவர். கடத்தல் - வஞ்சியாது எதிர் நின்று பொருது வெல்லல். எம்பி-
மரூஉமொழி. அரனும் - உம்மை உயர்வு சிறப்பு உம்மை.            88

3629.'பிரிபவர் யாவரும்
     பிரிக; பேர் இடர்
வருவன யாவையும்
     வருக; வார் கழல்
செரு வலி வீர!
     நின்-தீரும் அல்லது,
பருவரல், என்வயின்
     பயிலற்பாலதோ?

    வார் கழல் - நீண்ட வீரக் கழல் அணிந்த; செரு வலி வீர -போர்
வலி படைத்த வீரனே; பிரிபவர் யாவரும் பிரிக - (என்னைத்தனியே
விட்டுப்) பிரிகின்றவர்கள் எல்லோரும் பிரிந்து செல்க; பேர்இடர் வருவன
யாவையும் வருக -
பெருந்துன்பங்களாகவருகின்றவை எல்லாம் வருக;