நின் தீரும் அல்லது - அவை எல்லாம் உன்னால் நீங்குமேஅல்லாது; என் வயின் - என்னிடம்; (இனிமேல்); பருவரல் -துன்பம்; பயிலற் பாலதோ - தங்கி வருத்தும் தன்மையதோ? அன்று. யார் என்னை விட்டுப் பிரிந்தாலும் எத்துன்பம் நேர்ந்தாலும்அவை உன்னால் தீர்ந்துவிடும். நீ என்னுடன் இருத்தலால் எவ்வகைத்துன்பமும் எனக்கு நேராது என்றபடி. திண்பொருள் எய்த லாகும்; தெவ்வரைச் செகுக்க லாகும்; நண்பொடு பெண்டிர் மக்கள் யாவையும் நண்ணலாகும்; ஒண்பொரு ளாவது, ஐயா, உடன் பிறப்பு ஆக்கலாகா- எம்பியை ஈங்குப் பெற்றேன் என் எனக்கு அரியதுஎன்றான். (சீவக சிந்தாமணி. 1760) என்ற பாடலையும் ஒப்பிடலாம்.பருவரல் - துன்பம். பயிலல் - தொடர்ந்து தங்கி இருத்தல். பேர் இடர்- பண்புத் தொகை. வருவன - வினையாலணையும் பெயர். 89 அயோமுகியைக் கொல்லாமல் விட்டதுபற்றிக் கேட்டல் 3630. | 'வன் தொழில் வீர! "போர் வலி அரக்கியை வென்று, போர் மீண்டனென்" என, விளம்பினாய்; புன் தொழில் அனையவள், புகன்ற சீற்றத்தால் கொன்றிலைபோலுமால்? கூறுவாய்' என்றான். |
'வன் தொழில் வீர - வலிய போர்த் தொழில் வல்ல வீரனே!; போர் வலி அரக்கியை - போர்த் தொழிலில் வல்லவளாகிய அரக்கியை; போர் வென்று மீண்டனென் - போரில் வெற்றி பெற்றுத் திரும்பினேன்; என விளம்பினாய் - என்று மட்டும் சொன்னாய்; புகன்ற சீற்றத்தால் - பெரியோர்கள் சொன்ன (நெறிப்படியான) சினத்தால்; புன் தொழில் அனையவள் - இழி தொழிலை உடைய அவளை; கொன்றிலை போலும் கூறுவாய் - கொல்லாமல் விடுத்தாய் போலும்'; என்றான் - என்று இராமபிரான் சொன்னான். (ஆல் -அசை). சிற்றினத்தாரைச் சேரும் சினம் நெறிமுறை அறியாது; சீரொழுகு, சான்றோர் சினம் நெறிமுறை பிறழாது. 3632 ஆம் பாடலில் இதனை மனு நெறி என இராமன் சுட்டுதல் காண்க. பெண் என மனத்திடை பெருந்தகை நினைவதால், சான்றோர் சினமடங்கல் பற்றிப் புகன்றவை இலக்குவன் செயலில் நெறிமுறை பேணப்பட்டது. பெண் கொலை என்பது சின உச்சத்திலும் ஏலாச் செயல் என்பது சான்றோர் புகன்றது. தாடகை வதையின் போது முதலில் பெண் என இராமபிரான் நினைத்ததும், கோசிகன் விளக்கத்தை ஏற்றுப் பின் வதைத்ததும் வேறு பின்னணியில் கணிக்கத் தக்கது. 'பெண் நாட்டம் ஒட்டேன், இனிப் பேருலகத்துள்' (1723) என்று அயோத்தியில் பொங்கிய சினம். அப்போது தென் சொல் கடந்தானும் |