பக்கம் எண் :

72ஆரணிய காண்டம்

2632. மலைகளும், மரங்களும்,
     மணிக் கற்பாறையும்,
அலை புனல் நதிகளும்,
     அருவிச் சாரலும்,
இலை செறி பழுவமும்,
     இனிய சூழலும்,
நிலை மிகு தடங்களும்,
     இனிது நீங்கினார்.

    மலைகளும் - பல மலைகளையும்; மரங்களும் - பல மரங்களையும்;
மணிக்கற்பாறையும் - அழகியகற்பாறைகள் நிறைந்த இடங்களையும்;
அலை புனல் நதிகளும் - அலைகளோடு கூடிய நீர் மிக்கஆறுகளையும்;
அருவிச் சாரலும் - நீர் அருவி பாயும் மலைப் பக்கங்களையும்; இலை
செறிபழுவமும் -
இலைகள் அடர்ந்த சோலைகளையும்; இனிய சூழலும் -
இனிமையாய் விளங்கியஇடங்களையும்; நிலை மிகு தடங்களும் - ஆழம்
மிகுந்த நீர்நிலைகளையும்; இனிதுநீங்கினார் - இனிமையாகக் கடந்து
சென்றனர்.

     மலைகள் முதலிய இனிய சூழல் பலவும் இராமன் முதலியவர்களுக்குத்
தோற்றத்தால் கண்ணுக்குஇனிமையும் வாழ்தற்கு மகிழ்ச்சியும் அளித்தமையால்
நடந்து சென்ற வருத்தம் தெரியாமல்காட்சிகளில் இனிமை கண்டு
மகிழ்ந்தனர். பழுவம் - காடு, கல்லதரத்தமுமாம் (சீவக. 1185)சூழல் -
தவச்சாலைகளுமாம், நிலை - பரப்பு.           2

இராமன் தண்டக வனத்திற்கு வர, முனிவர்கள் மகிழ்தல்

2633.பண்டைய அயன்
     தரு பாலகில்லரும்,
முண்டரும், மோனரும்,
     முதலினோர்கள் அத்
தண்டக வனத்து உறை
     தவத்துளோர் எலாம்
கண்டனர் இராமனை,
     களிக்கும் சிந்தையார்.

    பண்டைய அயன் தரு பால கில்லரும் - முதன் முதலில் தோன்றிய
பழமையான பிரமதேவன் பெற்றவர்களாகிய பாலகில்லரும்; முண்டரும் -
மழித்த தலையை உடையவர்களும்; மோனரும் - மௌன விரதம்
பூண்டவர்களும்; முதலினோர்கள் - முதலியவர்களாகிய; அத்தண்டக
வனத்துறை தவத்துளோர் எலாம் -
அந்தத் தண்டகாரணியம் எனும்
காட்டில் வாழ்கின்ற முனிவர்கள் எல்லாம்; இராமனைக்கண்டனர்
களிக்கும்