| 3645. | மரபுளி நிறுத்திலன், புரக்கும் மாண்பிலன், உரன் இலன் ஒருவன் நாட்டு உயிர்கள் போல்வன; வெருவுவ, சிந்துவ, குவிவ, விம்மலோடு இரிவன, மயங்குவ, இயல்பு நோக்கினர். |
| 3646. | மால் வரை உருண்டன வருவ; மா மரம் கால் பறிந்திடுவன; கான யாறுகள் மேல் உள திசையொடு வெளிகள் ஆவன; சூல் முதிர் மேகங்கள் சுருண்டு வீழ்வன; |
இச் செய்யுள்கள் மூன்றும் ஒரு தொடர்ச்சி (கவந்தனின் கைப்பரப்புக்குள் சிக்கிய); யானையே முதல் எறுப்பு இனம் கடையுற உறுப்பு உடை உயிர் எலாம் - பேருருவம் கொண்ட யானை முதலாகச் சிறு வடிவம் கொண்ட எறும்பு வரையுள்ள உடல் கொண்ட உயிர்கள் யாவும்; உலைந்து சாய்ந்தன - நிலைகுலைந்து சாய்ந்தன; வெறிப்பு உறு நோக்கின - அவை வெறித்த பார்வையுடையனவாய்; வெருவுகின்றன - அஞ்சின; பறிப்பு அருவலையிடைப் பட்ட பான்மைய - (மேலும் அவை) நீக்குதற்கு அரிய வலையிலே அகப்பட்டுக் கொண்ட தன்மையுடையவையாயின. மரபுளி நிறுத்திலன் - அந்தந்த நிலைகளில் அவ்வவற்றை நிறுத்தாதவனும்; புரக்கும் மாண்பு இலன் - ஆளும் மாட்சிமை இல்லாதவனும்; உரன் இலன் ஒருவன் - வலிமை இல்லாதவனும் ஆகிய ஓர் அரசனின்; நாட்டு உயிர்கள் போல்வன - நாட்டிலே வாழ்கின்ற குடி மக்களைப் போன்றவையாயின; வெருவுவ - அவ்வுயிர்கள் யாவும் அஞ்சின; சிந்துவ - சிதறின; குவிவ - (உள்ளமே யன்றி) உடல்களும் குவிந்தன; விம்மலோடு இரிவன - துயரத்தோடு ஓடின; மயங்குவ - திகைத்து நின்றன; இயல்பு நோக்கினர் - இவ்வாறு துன்புற்ற உயிர்களின் தன்மையை இராமலக்குவர் பார்த்தனர். மால்வரை உருண்டன வருவ - பெரிய மலை(ப் பாறைகள்) உருண்டு வந்தன; மா மரம் கால் பறிந்திடுவன - மரங்கள் வேர் அற்று வீழ்ந்தன; கான யாறுகள் மேல் உள திசையொடு வெளிகள் ஆவன - மேலே உள்ள |